உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:டில்லி, ஹரியானாவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிக சி.பி.எஸ்.இ., பள்ளிகள்உள்ளன. மத்திய அரசின் கல்விக் கொள்கையை, தி.மு.க.,வினரும், முதல்வரின் குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற, ஒரு நொடி போதுமே... அதற்கு முதல்வர் உத்தரவிடுவாரா?டவுட் தனபாலு: மாநில அரசின் பாடத்திட்டத்துக்கு பள்ளிகளை மாத்திட்டா, அவங்களிடம்படிக்கிறதுக்கு பதிலாக, அரசு பள்ளிகள்லயே படிச்சிடலாம்னு மாணவர்கள் கிளம்பிட மாட்டாங்களா...? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை இழுத்து மூட யோசனை கொடுக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி: டில்லி சட்டசபை தேர்தலில் வென்றால், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே, மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கும்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக பா.ஜ., வாக்குறுதிஅளித்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம் நடந்து, 10 நாட்களாகியும் இத்திட்டத்தை அமல்படுத்தவில்லை.டவுட் தனபாலு: உங்க, 'இண்டியா' கூட்டணியில் அங்கம்வகிக்கும் தி.மு.க., தமிழகத்தில்அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை, நாலு வருஷமா நிறைவேற்றவே இல்லை... ஆனா, பா.ஜ., அரசு மட்டும் பத்தே நாள்ல வாக்குறுதிகளை நிறைவேற்றணும்னு நீங்க எதிர்பார்ப்பது எல்லாம் பேராசை என்பதில், 'டவுட்'டே இல்லை!த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: காமராஜர் பெயருக்கும், புகழுக்கும், மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக, திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில் காமராஜர் பெயரில்,ஒரு காய்கறி சந்தை உள்ளது.தற்போது, இந்த சந்தை சீரமைக்கப்பட்டு, திறப்பு விழா நடக்கும்போது, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது; இதைத் தவிர்க்க வேண்டும்.டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகையே, 'தமிழகத்தில நடக்கும் தி.மு.க., ஆட்சியே காமராஜர் ஆட்சிதான்'னு ஆணித்தரமா சொல்லிட்டாரே... அந்த தைரியத்துல தான், காமராஜர் பெயரை மாத்திட்டு, கருணாநிதி பெயரை சூட்டுறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajan A
மார் 07, 2025 18:13

பெருந்தலைவர் காமராஜரை மக்கள் நன்றாக அறிவார்கள். அவர் பெயரை மாற்றினால், மக்கள் இதை ஞாபகம் வைத்துக் கொண்டு வோட்டு போட மாட்டார்கள்


கண்ணன்
மார் 07, 2025 11:43

முன்னாள் டில்லி தற்காலிக முதல்வர் தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டும் இன்றைய அரசு ஏற்கனவே இவர்கூறும் செயல்திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டது


D.Ambujavalli
மார் 07, 2025 06:27

Sticker அரசு, முன்னவர்கள் எந்த நலத்திட்டத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் அப்படி இப்படி 4 வருஷத்தை ஒட்டிவிட்டு, அதே வாக்குறுதிகளை சொற்களை மாற்றிப்போட்டு அடுத்த தேர்தலில் மக்களுக்கு எடுத்துச்செல்ல தயாராகிறார்கள் இதை 10 நாளுக்குள் 2500 தூக்கிக் கொடுக்க வேண்டுமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை