உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர், கோவி.செழியன்: சமஸ்கிருதம், பேச்சு வழக்கு இல்லாத ஒரு மொழி. அம்மொழிக்கு ஊக்கத்தொகையாக நுாற்றுக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், உலக புகழ்பெற்ற செம்மொழியான தமிழுக்கு வெறும், 24 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழ் விவகாரத்தில், பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அரசும் நாடகம் ஆடுகிறது.டவுட் தனபாலு: ஒரு தாய்க்கு நாலஞ்சு பிள்ளைகள் இருந்தாலும், சவலை பிள்ளைக்கு தானே ஊட்டச்சத்தான உணவுகளை குடுப்பாங்க... அந்த மாதிரி, நல்லா வளர்ந்து செம்மொழி பெற்ற தமிழுக்கு குறைவாகவும், வளராம இருக்கிற சமஸ்கிருதத்துக்கு கூடுதலாகவும் நிதி வழங்கியதில் குறை காணலாமா என்ற, 'டவுட்' வருதே!  மாணவர் காங்., நிர்வாகிகள் மத்தியில், ராகுல் எம்.பி., பேச்சு: இன்றைய மாணவர்கள், நாளைய அரசியல் தலைவர் என்பதில் மாற்றம் இல்லை. நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில், கவுன்சிலர், நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி.,மாநில அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமர் போன்ற பதவிகளை பெற முடியும். அதற்காக, நீங்கள் லட்சிய உணர்வுடன் மக்கள் நலப்பணி, கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: உங்க கட்சியில யாரும், எந்த பதவிக்கும் சட்டுன்னு வந்துட முடியுமா என்ன... என்ன தான் கட்சிக்காக உழைச்சு, களைச்சிருந்தாலும், உங்க குடும்பத்தின் பரிபூரண ஆசி இருந்தால் தானே, எந்த பதவியும் கிடைக்கும்... மல்லிகார்ஜுன கார்கே, உங்க கட்சியின் தலைவரா இருந்தாலும், 'லகான்' உங்க கையில் இருப்பதுவே இதற்கு சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!  அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, 'மாஜி' எம்.எல்.ஏ., விஜயகுமார்: பா.ஜ.,வினர் என் காரை வழிமறித்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து கேட்டனர். 'எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அ.தி.மு.க., கொள்கை தான் என் கொள்கை' என சொன்னேன். ஆனாலும்,உள்ளூர், பா.ஜ.,வினர் வற்புறுத்தியதால், கையெழுத்து போட்டு விட்டேன். டவுட் தனபாலு: அது சரி... 'வற்புறுத்தி கேட்டதால், கையெழுத்து போட்டேன்'னு சொல்றீங்களே... நாளைக்கே, உங்க சொத்துக்களை யாராவது அவங்க பெயருக்கு மாத்தி எழுதிட்டு, வற்புறுத்தி கேட்டாலும் இந்த மாதிரி கையெழுத்து போட்டு கொடுத்துடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மார் 10, 2025 23:39

எல்லோரும் இன்னொரு கட்சிக்குத்தாவ துண்டுதான் போட்டு வைப்பார்கள். விஜயபாஸ்கர் கையெழுத்து போட்டு காத்திருக்கிறார்.


MUTHU
மார் 10, 2025 20:02

தமிழ் மொழியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமஸ்கிருதத்தில் உரு கொடுத்தது பண்டைய இந்தியாவால் இருந்த அனைத்து பகுதி பல்வேறு மொழி பகுதிகளில் வாழ்ந்த முனிவர்கள் தான்.


Dharmavaan
மார் 10, 2025 06:50

சவாலை ழந்தை உதாரணம் என் எண்ணம் .முதல் முறையாக வெளிப்பட்டது. மேலும் சமஸ்க்ரித ஓலை சுவடிகளில் எவ்வளவோ விஞ்ஞான, வான் இயல்,மருத்துவம் விமான வடிவமைப்பு போன்ற எவ்வளவோ புதையல்கள் உள்ளன. தமிழ் மொழி இலக்கியம் தவிர எதற்கும் பயனில்லை


D.Ambujavalli
மார் 10, 2025 06:37

இவர் என்ன குழந்தையா, கையெழுத்துப்போடு என்று நீட்டியதும் போட? நாளைக்கு பா ஜ கட்சி உறுப்பினர் அட்டையையும் திணித்தார்கள் , வாங்கிக்கொண்டு விட்டேன் , தேர்தலில் டிக்கெட் கொடுத்தார்கள் மனமே இல்லாமல் வாங்கிக்கொண்டு தேர்தலில் நின்றேன் என்பாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை