உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இருக்கிறது என, நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். பா.ஜ.,வின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கூட கண்டிக்க மறுத்து, தொடர்ந்து மென்மையான போக்கை அ.தி.மு.க., கையாண்டு வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில், இரு கட்சிகள் இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.டவுட் தனபாலு: உங்க குற்றச்சாட்டை பார்த்துட்டு, 'பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும், உறவும் இல்லை'ன்னு அ.தி.மு.க., அறிவிக்கணும்... பா.ஜ., பக்கம் அ.தி.மு.க., போகாது என்பது உறுதியாகிட்டா, தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் நீங்க, அந்த முகாமுக்கு மாறிடலாம்னு கணக்கு போட்டு காய் நகர்த்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: யமுனை நதியில் விஷம் கலந்ததாக பொய் பிரசாரம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி, ஹரியானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து 8,500 கோடி ரூபாய் நிதி பெற்றும், நதியை சுத்தம் செய்யும் எந்த பணியையும் டில்லி அரசு செய்யவில்லை. டவுட் தனபாலு: 'கெஜ்ரிவால் அரசு எதையும் செய்யலை'ன்னு 10 வருஷமா குற்றம் சாட்டிட்டே தானே இருந்தீங்க... அதனால, மத்திய அரசே பொறுப்பெடுத்து, யமுனை நதியை சுத்தம் செய்திருக்கலாமே... கெஜ்ரிவால் அரசிடம் 8,500 கோடி ரூபாயை துாக்கிக் கொடுத்துட்டு, இப்ப இப்படி புலம்பணுமா என்ற, 'டவுட்' வருதே!தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழக கவர்னர் ரவி, எல்லாவற்றுக்கும் அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அனைத்து பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். அது எங்களுக்கு நன்றாக உள்ளது; தொடர்ந்து, அவர் அதை செய்ய வேண்டும். அவர் அதை செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு, இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று, கவர்னரை கேட்டுக் கொள்கிறேன். டவுட் தனபாலு: ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் தர முடியலை... அதே நேரம், கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு, 'பா.ஜ.,வின் ஊதுகுழலா செயல்படுறார்'னு ஈசியா பதிலடி தர முடியுறதால, கவர்னரை இப்படி உசுப்பேத்தி விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 17:48

2026 தேர்தல் தான் சீமான், திருமா, ராமதாஸ், பிரேமலதா இவர்களின் அரசியல் வாழ்க்கை யின் இறுதித் தேர்தல்.


Louis Mohan
பிப் 03, 2025 18:26

பேராசை கூடாது


K.J.P
பிப் 03, 2025 19:16

வைகுண்டருக்கு பேராசை அதிகம்.அது நிராசையாக மாறும் என்பதை மக்களிடம் பேசிப் பாருங்கள்.


vijai
பிப் 04, 2025 12:45

திருமாவளவன் தான் அரசியல் வாழ்க்கை கடைசி தேர்தல்


Thiyagarajan S
பிப் 05, 2025 14:17

இந்த லிஸ்ட்ல ...யும் சேர்த்துக் கொள்ளுங்கள்...


V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 17:46

சங்கியாக மாறி, புதிய சங்கி கும்பலான தவெக வழியாக பாஜக வில் ஒட்டிக்கொள்ள நினைக்கும் திருமாவுக்குப் போட்டியா அதிமுக வந்தால் அவருக்கு கோபம் வராதா?சங்கி திருமா, உடாதீங்க. காவி கலரில் ஒரு சட்டை, மோடி கோட் எல்லாம் வாங்கி போட்டுக் கொள்ளுங்கள். அதான் மானங்கெட்டு துட்டு வாங்கியாச்சு அப்புறம் என்ன???


karupanasamy
பிப் 03, 2025 15:02

குருமாவுக்கு பல்லுப்படாமல் பக்குவமா வேலைபார்ப்பதைத்தவிர வேறு வழியே இல்லை இப்போது கோபாலபுரம் கசந்துவிட்டது எம்ஜிஆர்மாளிகை உள்ளேநுழைய வழி இல்லை [ஸ்சி ஆனந்த்து மனசு வைத்தால்தான் உண்டு.


K.J.P
பிப் 03, 2025 14:14

கவர்னரினால் கட்சிக்கு ஆதரவு பெருகுகிறதாம். சட்ட மன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் மக்களவைத் தேர்தலில் குறைந்ததை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். கூட்டணியை வைத்து தான் வெற்றி தோல்வி.


Anantharaman Srinivasan
பிப் 03, 2025 13:02

வெயிட் ..Dismissed end of this year.


K.J.P
பிப் 03, 2025 12:56

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.இதுதான் திருமாவின் இன்றைய நிலை.


Dharmavaan
பிப் 03, 2025 08:10

ஆளுநர் சுடாலின் ஆட்சியின் அவலங்களை தேச விரோத செயல்களை சுட்டி காட்டுவது பொறுக்க முடியவில்லை அது ஒரு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.இன்னும் டிஸ்மிஸ் ஏன் செய்யவில்லை தெரியவில்லை


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 03, 2025 07:39

என்னப்பா இருக்கிரது ஒரே சேர். அதுக்கு எதாச்சும் ஆபத்து வந்துடுச்சா? அறிக்கை பலமா இருக்கு? பேசாம ஒரு துணை முதல்வர் பதவிக்கு துண்ட போட்டு வைப்போம்


D.Ambujavalli
பிப் 03, 2025 06:24

இவர்கள் தாளத்துக்கு ஆடாததால் கவர்னர் வேண்டாதவர் ஆகிவிட்டார் எதிர்க்கட்சியில் EPS இந்த வழக்குகளைக்காட்டி அவர்களை silent செய்தபின் எதேச்சாதிகார செய்யவிடாமல் இடையூறு செய்வதை சகித்துக்கொள்ள முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை