உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: அக். 9

‘டவுட்’ தனபாலு: அக். 9

பா.ஜ., ஆந்திர மாநில இணை பொறுப்பாளர் வானதி சீனிவாசன்: தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநிலம் என்கின்றனர். ஆனால் இங்கு, 40 சதவீதம் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமமாகத் தான் த.வெ.க., அரசு செயல்படுகிறது. ‘ஊழலற்ற ஆட்சி’ என்கின்றனர்; ஆனால், கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. டவுட் தனபாலு: ‘கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை’ன்னு சொல்றீங்களே... அப்படி என்றால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய மேல்மட்டத்தில் ஊழல் இல்லை என்பதை, ‘டவுட்’ இல்லாம ஏத்துக்கிறீங்களா... மேல்மட்டத்தில் நடந்த மாற்றம் படிப்படியா கீழ்மட்டத்துக்கும் பரவும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தாராபுரம் த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா, அமைச்சர்களுக்கு 14 லட்சம் ரூபாய் செலவில் அறைகள், ‘புக்’ செய்து கொடுத்ததாக பேசுவது போல வெளியான வீடியோ, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 1,000 கோடி ரூபாய் செலவு செய்தது போல் நானும் ஏ.ஐ., வீடியோவை வெளியிடுகிறேன்; அதை பார்க்கிறீர்களா? டவுட் தனபாலு: அது சரி... ஏ.ஐ., தொழில்நுட்ப வீடியோக்கள் எல்லாம் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கும்... ஆனா, உங்க கட்சியின் சத்யபாமா பேசும் வீடியோ அப்படியில்லையே... அதனால தான், ‘அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி, அது போலி வீடியோன்னு நிரூபிக்கிறோம்’னு சவால் விடாம பதுங்குறீங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி: வேளாண் துறை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதமாகிறது. இப்போது வரை, வேளாண் துறைக்கு புதிய செயலர் நியமிக்கப்படவில்லை. பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், வேளாண் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமை தேவை. அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை வேளாண் துறைக்கு நியமிக்காமல், பொறுப்பு செயலரிடம் அந்த துறையை விட்டிருப்பது, விவசாயிகள் நலனில் இந்த அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. டவுட் தனபாலு: உங்க ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான டி.ஜி.பி., பதவியை 10 மாதங்களா நிரப்பாம, பொறுப்பு அதிகாரி போட்டே காலத்தைக் கடத்தினீங்களே... அப்படிப்பட்ட உங்களுக்கு, த.வெ.க., அரசை கேள்வி கேட்க தார்மீக உரிமை இருக்கா என்ற, ‘டவுட்’ வருதே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kalyanaraman Subramaniam
அக் 09, 2026 10:24

கீழ்மட்டத்திலே மாற்றம் தெரியலை அப்படின்னு தினமலரில் தினமும் வரும் செய்திகளே ஆதாரம்... என்ன காரணத்தினாலேயோ தினமலர் அவங்களோட டீ கடை பெஞ்சில வெளிவரும் மேல்மட்ட ஊழலை கண்டுக்காம இப்படி முட்டுக் குடுக்கணும்னு டவுட் எனக்கு வருது... உதாரணத்துக்கு, நேத்திக்கி வெளிவந்த சமயபுரம் கோவில் விவகாரம்.


Anantharaman Srinivasan
அக் 09, 2026 18:34

மதில்மீது பூனையாக இருப்பதே நல்லது.


Lakshminarasimhan
அக் 09, 2026 08:08

கீழ் மட்டம் மேல்மட்டம் என்ன எல்லாம் ஒரே வட்டத்துக்குள் தான் வானதி சொல்லும் கீழ்மட்டம் என்பது மேல்மட்டத்தால் நியமனம் செய்யப்பட்ட அவர்களின் ஏஜெண்டுகள் அவ்ளோ தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை