உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதாக, சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை முதலில் முதல்வர் விஜய் நிறைவேற்ற வேண்டும். மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, போதைப் பொருட்கள் விற்பனை, குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு பாதிப்பை கண்டித்து, வரும் 4ம் தேதி என் தலைமையில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். டவுட் தனபாலு: பா.ஜ., மாநிலத் தலைவரான நீங்க, சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்துவது தானே பொருத்தமா இருக்கும்... சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தினா கூட்டம் கூடாதுன்னு பயந்து போய், சொந்த பந்தங்கள் நிறைஞ்சிருக்கும் உங்க சொந்த ஊரில் போய் ஆர்ப்பாட்டம் நடத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! lll அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: முதல்வர் விஜய், 'உங்கள் அண்ணனாக இருப்பேன்; மாமனாக இருப்பேன்' என பச்சைப்பொய் பேசுகிறார். முதல்வர் விஜய்க்கு உண்மையிலேயே பாசம் இருந்தால், தாய், தந்தை, கட்டிய மனைவி, பிள்ளைகளுடன் வாழ வேண்டும்; வெறும் வசனம் பேசினால் போதாது; நிஜத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும். குடும்பம் குறித்து பேச விஜய்க்கு தகுதியே இல்லை. டவுட் தனபாலு: முதல்வர் விஜய் யார் கூட வாழணும் என்பதை, நீங்க எப்படி முடிவு பண்ண முடியும்...? அவரது தனிப்பட்ட வாழ்க்கையால, அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டா மட்டும் தான் நீங்க கேள்வி கேட்கலாம்... இந்த எளிய உண்மை கூட, மூத்த அரசியல் தலைவரான உங்களுக்கு தெரியாதா அல்லது எல்லாம் தெரிஞ்சும், அரசியலுக்காக இப்படி பேசுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது! lll த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடையில், மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கு சட்டைக்கு பதிலாக, 'டி - ஷர்ட்' கொண்டு வரலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். டவுட் தனபாலு: 'டி - ஷர்ட்' என்ன... முதல்வர் விஜய் பாணியில் மாணவர்களுக்கு, 'கோட் - சூட்' கூட கொடுங்க... யாரும் வேண்டாம்னு சொல்லப் போறதில்லை. அதேநேரம், அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் மூலம், தரமான கல்வி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தால், 'டவுட்' இல்லாம தங்களை பாராட்டலாம்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
அக் 02, 2026 16:27

மாணவர்கள் டீ ஷர்ட் அணிவது. முக்கியமா, பள்ளிகளில் கழிப்பறை. வசதி, ஆசிரியர்கள் நியமனம், அவர்களும் நன்கு. படித்தறிவுள்ளவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக. இருப்பது. முக்கியமா?


Anantharaman Srinivasan
அக் 02, 2026 15:31

அரசை எதிர்த்த மாதிரி நடத்த துணிச்சல் வேண்டும்.


duruvasar
அக் 02, 2026 12:55

அரசு பணத்தை அளந்து விடும்போது அந்த பணத்திற்கு மாமன், அண்ணன் பணம் என்று பெயர் சூட்டுவது தவறு என்று எழுத பாரம்பரிய ஊடகங்களுக்கு வக்கில்லாமல் போய்விட்டதே என்ற டவுட்டு எழவில்லையா


Lakshminarasimhan
அக் 02, 2026 12:44

தினமலர் டவுட் நம்ம பா ஜ க மாநில தலைவர் நைனார் அவர்கள் திருநெல்வேலி ஆர்பாட்டம் பற்றி எழுப்பியது நியாயம் இல்லை இதே மாதிரி முன்னாள் தலைவர் அண்ணாமலை நடத்திய ஆர்பாட்டங்களுக்கு டவுட் எழுப்பியது உண்டா ?


baala
அக் 02, 2026 11:40

சொந்த வாழ்க்கை ஹான் என்றாலும் பண்பாடு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா? மக்களுக்கு எப்படி அறிவுரை சொல்லமுடியும்?