வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டவுட் தனபாலு ல த வெ க அமைச்சரை பற்றி விமர்சனம் வந்தா அதை அதிமுக அமைச்சருக்கான விமர்சனமா மடை மாற்றுவதில் நீங்கள் கில்லாடி என்பதை டவுட் இல்லாமல் புரிந்துகொள்ளலாமா ?
மேலும் செய்திகள்
‘டவுட்’ தனபாலு: அக். 22
22-Oct-2026
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: மின்சாரம், சட்டம், சிறை, லஞ்ச ஒழிப்பு உட்பட ஏழு முக்கிய துறைகளை கவனிக்கும் த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார், அறிவிக்கப்படாத முதல்வராக மற்ற துறைகள் குறித்தெல்லாம் விளக்கம் கூறுகிறார். ‘அ.தி.மு.க.,வுக்கும், பழனிசாமிக்கும் எதிர்காலம் இல்லை’ என்று பேசிப் பேசியே த.வெ.க.,வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறார். டவுட் தனபாலு: உங்க கட்சியிலும், 30க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருக்காங்க... ஆனா, எல்லா பிரச்னைகளிலும் நீங்க மட்டும் தானே முந்திரிக்கொட்டை மாதிரி கருத்து தெரிவிக் கிறீங்க... இதன் மூலமா, விளம்பர வெளிச்சம் தேடிக்கிறீங்களோ என்ற, ‘டவுட்’ வருதே! lll ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தி.மு.க., – எம்.பி., பாலு: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை, ‘இ – மெயில்’ வாயிலாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம். அதில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். ஓட்டுச்சீட்டு வாயிலாக, இனி வரும் தேர்தல்களை நடத்த வேண்டும்’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: தமிழகத்தில், 97 லட்சம் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலமா நீக்கியிருக்காங்க... ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருக்கிறப்பவே, 97 லட்சம் போலி வாக்காளர்களை வச்சு கள்ள ஓட்டுகள் போட்டிருக்காங்களே... இந்த லட்சணத்துல, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வந்துட்டா, தமிழகத்துல நல்ல ஓட்டுகள் இருக்குமா என்பது, ‘டவுட்’ தான்! lll த.வெ.க., கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: கடந்த 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்ட தி.மு.க., மண்ணை கவ்வியது. 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்காமல் இருந்திருந்தால், 57 இடங்களை தி.மு.க., பெற்றிருக்காது. காங்கிரசின் பலம் மற்றும் உழைப்பில் தான் தி.மு.க., வெற்றி பெற்றது. டவுட் தனபாலு: அதே 2014 லோக்சபா தேர்தல்ல, தமிழகத்துல உங்க கட்சி 39 தொகுதிகள்ல தனித்து போட்டியிட்டதே... அதுல ஒரு தொகுதி தவிர, 38 தொகுதிகள்ல, ‘டிபாசிட்’டையே பறிகொடுத்துட்டீங்க... 2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, ஒன்பது இடங்கள்ல ஜெயிச்ச வரலாற்றை மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது! lll
டவுட் தனபாலு ல த வெ க அமைச்சரை பற்றி விமர்சனம் வந்தா அதை அதிமுக அமைச்சருக்கான விமர்சனமா மடை மாற்றுவதில் நீங்கள் கில்லாடி என்பதை டவுட் இல்லாமல் புரிந்துகொள்ளலாமா ?
22-Oct-2026