உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: நவ. 9

‘டவுட்’ தனபாலு: நவ. 9

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை, எப்படியாவது விலைக்கு வாங்கி, பா.ஜ., பின்புலத்துடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சேர்ந்து ஆட்சி அமைக்க நினைக்கின்றனர். தி.மு.க.,வினரிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், எங்கள் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். ஏற்கனவே, 70 கோடி ரூபாய் வரை, ‘ஆபர்’ கொடுத்து கைதாகினர். தற்போது, பா.ஜ., – அ.தி.மு.க., – தி.மு.க., மூன்றும் சேர்ந்து சதி செய்கின்றன. டவுட் தனபாலு: தி.மு.க., – அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,வையும் சேர்த்து, ‘கோர்த்து’ விடுறீங்களே... மத்திய அரசுடன் இணக்கமாக போகணும்னு உங்க தலைவரான முதல்வர் விஜய் நினைக்கிறாரு... நீங்க அரசியலுக்காக பா.ஜ., மீது குற்றஞ்சாட்டுவது, முதல்வரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையா போயிடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் குதிரை பேரம் நடத்துவதாக, த.வெ.க., – எம்.எல்.ஏ., முஸ்தபா கூறியிருக்கிறார். தி.மு.க.,வினர் தினமும் இதே திட்டத்தில் செயல்படுவதால், குதிரை பேரம் தொடர்ந்து நடக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வந்ததற்கு காரணம், அ.தி.மு.க., தலைமை மீது நம்பிக்கை இல்லாமை தான். டவுட் தனபாலு: அது சரி... ‘குதிரை பேரம் என்றால், ஆட்சியை பிடிக்கிறதுக்காக, ஆளுங்கட்சி மட்டுமே செய்ய வேண்டிய வேலை... ஆட்சியை கவிழ்க்கிறதுக்காக, எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் நடத்தக்கூடாது’ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது! lll அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமாரும், அ.தி.மு.க.,வினர் பேரம் பேசுவதாக முஸ்தபா எம்.எல்.ஏ.,வும் கூறிஉள்ளனர். அ.தி.மு.க., பெயரை தேவையின்றி இழுப்பதை நிர்மல்குமாரும், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட அ.தி.மு.க.,வுக்கு, குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை. டவுட் தனபாலு: தி.மு.க.,வின் ஊழலை எதிர்த்து தான், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கினார் என்பதில், ‘டவுட்’டே இல்லை... அதேநேரம், முதல்வர் பதவியில் இருந்தப்பவே ஊழல் வழக்கில் சிறைக்கு போனது, இந்தியாவிலேயே உங்க முன்னாள் தலைவி ஜெயலலிதா மட்டுமே என்பதை மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’தான் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
நவ 09, 2026 19:28

'அவர்கள்'. கோடிகளைக். கொட்டிப் பிடித்தால் குதிரை. பேரம் Sofa அனுப்பும். பேரத்துக்குப். பெயர் என்ன. வைக்கலாம்?


Lakshminarasimhan
நவ 09, 2026 09:01

டவுட்டு மாத்திரம் அல்ல உண்மையும் அது தான் இந்த ஆட்சி கிறிஸ்துவ பாதிரியார்களின் ஆலோசனை படி நடக்குது அதன் ஒரு அங்கம் தான் திரு ஜான் ஆரோக்கியசாமி அவர்கள் விஜயின் ஆலோசகராக இருத்தல்


S.V.Srinivasan
நவ 09, 2026 08:14

நிர்மல் குமாரின் கற்பனை சக்தி அபாரம். அது சரி உங்க கட்சிக்கும் ட்ராவிட மாடல் கட்சிக்கும் இருக்கும் பங்காளி சண்டையில் பி ஜே பி ஐ எதுக்கு இழுக்கிறீங்க.


Ganesun Iyer
நவ 09, 2026 19:48

பிஜேபியை இழந்துவிடறது காங்கிரஸை குக்ஷி படுத்தி ஓடாம இருக்க செய்யத்தான்.. இதுல என்ன டவுட்டு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை