உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சட்டசபை சபாநாயகர்அப்பாவு: கடந்த 2017 முதல் படிப்படியாக, மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. 2012ல்ஜி.எஸ்.டி., வந்த பின், மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமை பறிபோய், பிரிட்டிஷ் ஆட்சி காலம் போல மாறி விட்டது.டவுட் தனபாலு: நீங்க சொல்ற 2012ல், மத்தியில் காங்.,தலைமையிலான கூட்டணி அரசு தானே பதவியில் இருந்துச்சு...உங்களுக்கு இப்ப சபாநாயகர்பதவியை தந்துள்ள தி.மு.க.,வும்,அந்த அரசில் தான் அங்கம் வகித்தது என்ற வரலாற்றை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!முதல்வர் ஸ்டாலின்: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு, நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்திய ஜனநாயகம், ஒற்றை கட்சியின்பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படக் கூடாது. மத்திய அரசானது, இத்தகைய திசை திருப்பல் உத்திகளில், தன் ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.டவுட் தனபாலு: 'கருணாநிதி எழுதிய, 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம், 273-ம் பக்கத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரவேண்டும்என்று இந்தியாவிலேயே முதல் முறையாக குரல் கொடுத்துள்ளார்' என, நடப்பாண்டு ஜனவரியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருந்தாரே... கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் நீங்க, அவரது இந்த கருத்தை மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: ராஜஸ்தானில், அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 33 வயது பெண் துணை கலெக்டருக்கு கூடுதல் மயக்க மருந்து தந்ததால்,அவர் இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.டவுட் தனபாலு: மெத்த படித்த துணை கலெக்டருக்கே இந்த கதி என்றால், அப்பாவி ஏழை, எளியவர்களின் கதியை நினைத்தால், கவலையா இருக்குதே... டாக்டர்களை,இரண்டாவது கடவுளாகவே மக்கள்பார்க்குறாங்க... அவங்க உயிரோடுவிளையாடும் அரைவேக்காடுமருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வாழ்நாள் தடை விதிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை