தமிழக துணை முதல்வர் உதயநிதி: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம்உள்ளனர். பட்டா கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துஉள்ளனர். ஆனால், முறையாகபட்டா வழங்க நடவடிக்கை இல்லை. பட்டா கேட்டு விண்ணப்பிப்போருக்கு, அவர்கள்கேட்கும் இடத்தில் வழங்க முடியவில்லை என்றால், மாற்றுஇடம் கண்டறிந்து வழங்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பம் மாற்றுவதற்கு கூட, பொதுமக்கள் அலையாய் அலைய வேண்டிய நிலை உள்ளது. டவுட் தனபாலு: தமிழகத்தில், கிட்டத்தட்ட மூன்றரை வருஷமா தி.மு.க., ஆட்சி தானேநடக்கிறது... உங்க குற்றச்சாட்டுகளை பார்த்தால், எதிர்க்கட்சி ரோலையும் சேர்த்து நீங்களே பண்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!அ.தி.மு.க., பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன்: 'வரும் 2026ல் அ.தி.மு.க.,வுக்கு பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார்' என, தினகரன் சொல்கிறார். அ.தி.மு.க.,வை வைத்து, தமிழகம் முழுதும்தவறான வழியில் சொத்து சேர்த்ததை தவிர, அ.தி.மு.க.,வுக்கும்,அவருக்கும் சம்பந்தம் இல்லை.டவுட் தனபாலு: பழனிசாமிதலைமையில், 2017 - 21 வரைக்கும் நடந்த நாலு வருஷ அ.தி.மு.க., ஆட்சியில், நீங்களும்தான் அமைச்சராக இருந்தீங்க... தவறான வழியில் சொத்து சேர்த்த தினகரன் மீது, அப்பவேசட்ட நடவடிக்கை எடுக்காம இப்ப குற்றம் சாட்டுவது முறையா என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: 'கோவை காங்கிரசை காப்போம்;காங்கிரசை வளர்ப்போம்' எனும்பெயரில் சிறப்பு கூட்டம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில், 'அகில இந்தியகாங்., செயலர் மயூரா ஜெயகுமார்,அவரது உதவியாளர் கருப்புசாமியை, கோவை மாநகர் மாவட்ட தலைவராக நியமித்து, கட்சியை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கட்சியின்உண்மை தொண்டர்களை புறக்கணித்து, கட்சிக்கு எதிராகசெயல்பட்டு வருகிறார். எனவே,ஜெயகுமாரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டவுட் தனபாலு: மாவட்டஅளவில் கூட்டம் நடத்தி, தேசிய அளவில் பொறுப்பில் இருக்கும் ஒருத்தரை நீக்க வலியுறுத்தி தீர்மானம் போடுறீங்களே... இது, ஜெயகுமாருக்கு அந்த பதவியை தந்த ராகுலை குறை சொல்ற மாதிரி ஆகாதா... இந்த மாதிரி காமெடி எல்லாம் உங்க கட்சியில மட்டும் தான் நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!