உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக வெற்றி கழக தலைவர்விஜய்: நம் அரசியல் துவங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பர். அத்தகைய விமர்சனங்களில், ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும் கூட மனதில் ஏற்றி விடாமல் கடந்து செல்வோம். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலை கையில் எடுப்போம்; வரும் 2026ல் நம் இலக்கை அடைவோம்.டவுட் தனபாலு: அது சரி... 2026ல் கோட்டையில் கொடி ஏற்றிடலாம்னு உறுதியா நம்புறீங்கபோல தெரியுதே... ஆனா, அந்த கோட்டையை பிடிக்க வட்டம், குட்டம், நகரம், ஒன்றியம், மாவட்டம்னு அடுக்கடுக்கான அமைப்பு ரீதியான பலம் வேணுமே... அதை எல்லாம், 2026 சட்டசபை தேர்தலுக்குள்ள உருவாக்கிடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'ஆட்சியில் அதிகார பகிர்வு' என விஜய் கூறியது, தி.மு.க., கூட்டணியில்சலசலப்பை ஏற்படுத்தவே! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய, 25 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள அ.தி.மு.க., குரல் கொடுக்க வேண்டும். இதனோடுசில கட்சிகள் இணைந்தால், அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.ஆட்சியிலும், அதிகாரத்திலும்பங்கு என்பதில், வி.சி., எப்போதும் உறுதியாக உள்ளது.டவுட் தனபாலு: 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அ.தி.மு.க., குரல்கொடுக்கணும்'னு கேட்குறீங்களே...தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அரசியல் ரீதியாக என்ன தான் எதிரும், புதிருமாக இருந்தாலும்,'தனித்து ஆட்சி' என்பதில் மட்டும், ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்கவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: அரசியல்ரீதியாக பார்த்தால், அ.தி.மு.க., எந்த கொள்கை திட்டத்தின்படி செயல்படுகிறதோ, அதையே நடிகர் விஜயும் சொல்லி இருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க.,வை விமர்சிக்கவோ, குறைகளை சொல்லவோ அவரால் முடியவில்லை. குறைகள்சொல்ல எதுவும் இல்லை என்பதாலேயே சொல்லவில்லை. டவுட் தனபாலு: என்னங்க இது... உங்க நிர்வாகத்தால, மக்கள் பாதிக்கப்பட்டால் தானே குறை சொல்ல முடியும்... பல தேர்தல்கள்ல அடி மேல அடி வாங்கி, நொந்து, நுாலாகி கிடக்கிற உங்களை ஏன் சீண்டணும்னு தான், கண்டுக்காம விஜய் கடந்து போயிட்டாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
நவ 01, 2024 18:54

ஆட்சியில் உள்ளவர் செய்யும் குற்றம் குறைகளைத்தான் விமர்சிக்க வேண்டும் அக்கடா என்று அவ்வப்பொழுது ‘பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் ‘ அறிக்கை விட்டுக்கொண்டிருப்பவரிடம் விமர்சிக்க என்ன இருக்கிறது? இதை வைத்து அவர் அதிமுகவில் கூட்டணி சேர்ந்துவிட்டார் என்றுகூடக் கூறுவார் போலிருக்கிறது


SUBBU,MADURAI
நவ 01, 2024 07:15

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைய அதிமுக குரல் கொடுக்க வேண்டும் என்று கூற திருமாவளவனுக்கு வெட்கமாக இல்லை? நீ உண்மையிலேயை திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் தைரியமான ஆளாக இருந்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து இந்தக் கருத்தை சொல்லியிருக்க வேண்டும். திமுக தலைமையிடம் கூட்டணி ஆட்சி ஆட்சியில் பங்கு என்று கேட்க திராணியில்லாமல் எதற்கு கூட்டணி ஆட்சி பற்றி அதிமுகவிற்கு புத்திமதி சொல்ல வேண்டும் உனக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் இதை நேரடியாக திமுக தலைமையிடம் கேட்க வேண்டியதுதானே அதை விட்டு அதிமுகவிற்கு நீ ஏன் ஆலோசனை கூற வேண்டும் பேசாமல் திமுக போடும் பிச்சை சீட்டு நோட்டு என்ற எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு அக்கட்சியின் தலைமை குடும்பத்துக்கு வாலாட்டுவதை உனக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதை புரிந்து கொள்.


Suppan
நவ 01, 2024 15:53

அடங்க மறு அத்து மீறு அப்படின்னு கூவுவீங்களே இப்போ கூவுங்களேன் பெட்டி கிடைக்காதுன்னு பயமோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை