தமிழக வனத்துறை அமைச்சர்பொன்முடி: அரசின் திட்டங்களுக்குகருணாநிதி பெயரை வைப்பதாக,எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிவிமர்சித்துள்ளார். விழுப்புரத்தில்அ.தி.மு.க., ஆட்சியில் வெட்டியகுளத்திற்கு, 'அம்மா குளம்' என்று,ஜெ., பெயரை வைத்தனர். அதைஅவர்கள் மறந்துவிட்டு, தி.மு.க.,வைவிமர்சிக்கின்றனர். டவுட் தனபாலு: அம்மா என்பதுபொதுவான வார்த்தை... மனிதன்பேசும் முதல் வார்த்தையும் அதுதான்... அதனால, அம்மா உணவகம், அம்மா குளம் என, பெயர் சூட்டியதில் எந்த தப்பும் இல்லையே... நீங்க தெருவுக்குத்தெரு எந்த திட்டங்களை செஞ்சாலும் கருணாநிதி பெயரைசூட்டுவதுதான் கண்டனங்களுக்குகாரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி:தி.மு.க., அளித்த 550 தேர்தல் வாக்குறுதிகளில், இதுவரை 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, தமிழகமக்களும், இந்த அரசு மீது கோபத்தில் உள்ளனர். இது, வரும் தேர்தலில் தெரியும். 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், கூட்டணி ஆட்சி அமையும்; அதில், பா.ம.க., இடம்பெறும். டவுட் தனபாலு: கடந்த 2011தேர்தல்லயே, 'பா.ம.க., ஆட்சி'ன்னுமுழங்குனீங்களே... இப்ப, 'கூட்டணிஆட்சி அமையும்; அதுல, பா.ம.க.,வும்இடம்பெறும்' என்றால், உங்க கட்சியின் பலம் குறைஞ்சிடுச்சு என்ற உண்மையை உணர்ந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்:கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு, தங்களுடைய ரேஷன்கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவரது விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள ஒருவர்கூட விடுபடாத அளவில் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. 'முதல்வரின் ஆலோசனைகளை பெற்று, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர்உரிமைத் தொகை வழங்கப்படும்'என்றே, விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதி அளித்தேன்.டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, மூணு வருஷத்துக்கும் மேலா அரசுஇயந்திரம் உங்களிடம் தான் இருக்கு... தகுதியுள்ள மகளிரை கண்டுபிடிக்க உங்களுக்கு ஏன்இந்த தாமதம்... மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களின் ஓட்டுகள் உங்களுக்கு எதிராகவிழும் என்ற தகவலால்தான், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!