உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: 'கச்சத்தீவை இந்தியாவிற்கு தர முடியாது' என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகிறார். தற்போது, இலங்கையில் தேர்தல் நடக்கிறது. அதனால் எதுவானாலும் சொல்லட்டும். அது பற்றி நாம் பேச தேவையில்லை.டவுட் தனபாலு: 'இலங்கையில் தேர்தல் நடக்கிறப்ப, அவங்க அப்படி தான் பேசுவாங்க... நம்ம நாட்டுல தேர்தல் நடக்கிறப்ப, நாங்களும், கச்சத்தீவை மீட்போம்னு வாக்குறுதி தருவோம்னு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'நீட் இல்லாமலேயே இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவர்களை, தமிழகம் தந்துள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் கல்வித்தரம் உயர்வானது. எனவே, நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. முதல்வர் டில்லியில் பிரதமரை சந்திக்கும்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குஅளிக்க வலியுறுத்துவார்.டவுட் தனபாலு: உச்ச நீதிமன்றமே நீட்டை ரத்து பண்ண முடியாதுன்னு சொல்லிடுச்சு... நீங்க என்ன தான் வலியுறுத்தினாலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க போறதில்லை... ஆயினும், அரசியலுக்காக திரும்ப திரும்ப இப்படி பேசிட்டு இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அமைச்சர் கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஊழல் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, அந்தர் பல்டி அடித்தது. இதை பார்த்த சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக, அந்த வழக்கு களை மீண்டும் விசாரித்து வருகிறது. இதிலிருந்தே, அந்தத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை அறியலாம்.டவுட் தனபாலு: உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்த ஊழல் வழக்குகளில், உங்க கட்சியின் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்குகளும் அடக்கம் என்பதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 23, 2024 19:11

உங்கள் 'இளைய பெருமான் ' 50 லட்சம் கையெழுத்து வாங்கி ஒன்றிய அரசையே அலற அடிப்பேன் என்றாரே, எதுவும் நடக்கவில்லையா ? இப்போது முதல்வர் 'அழுத்தம்' கொடுக்க ஆரம்பிக்கிறாரா ? 'அடியைப் பிடிடா பாரத பட்டா' கதைதான்


Rajan
செப் 23, 2024 04:23

நீட் விலக்கு என்று நீட்டித்து கொண்டுருக்க வேண்டியதுதான். அடுத்த தேர்தலில் மத்திய அரசை இன்னும் 5 ஆண்டுகளுக்கு கடிதம் மூலம் அழுத்தம் தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி பதவிக்கு வர வேண்டியதுதான் திட்டம். தமிழக மக்கள் மீது அபார நம்பிக்கை. எதிர் கட்சி தமாஷ் அறிக்கைகள் விட்டு கொண்டே இருந்தால் போதும் என்று உறுதி செய்து விட்டனர். End of Party Scheme போட்டு விட்டார்கள் போலிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை