உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்: ஆட்சி அதிகாரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி, மாறி இருக்கலாம். ஆனால், அதற்கு தளம் அமைத்து, இதை செய்ய வேண்டும் என, சொல்வது பொதுவுடைமை இயக்கமான கம்யூ.,க்கள் தான். எங்கள் கரம், எப்போதும் கம்யூ.,க்களை சார்ந்து இருக்கும். இது, எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது.டவுட் தனபாலு: என்னமோ, உங்க ஆட்சியே கம்யூ.,க்களின் ஆதரவுல தான் நடக்கிற மாதிரி பேசுறீங்களே... கேரளா தவிர, நாடு முழுக்க கம்யூ.,க்கள் எங்கே என்று தேட வேண்டிய நிலையில் தான் இருக்காங்க... தமிழகத்துல உங்க கட்சி தர்ற ஆக்சிஜன்ல தான் அவங்க வண்டி ஓடிட்டு இருக்கு என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!  பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தின் நலனுக்காக, நிழல் பட்ஜெட் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான ஆவணங்களை பா.ம.க., வெளியிட்டுள்ளது. தமிழக மக்களின் பிரச்னைகளை பற்றி ஆழ்ந்து யோசித்து, அதற்கான தீர்வுகளை முன்வைத்துள்ளோம். என்ன யோசித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுவதில்லை. மக்கள் பிரச்னை பற்றி தெரியாத கட்சிகளுக்கு தான் ஓட்டு போடுகின்றனர்.டவுட் தனபாலு: ஏட்டளவில் திட்டங்களை தீட்டுறது ரொம்பவே சுலபம்... ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து, கஜானா நிலவரத்தை கவனித்து ஆட்சி நடத்துறவங்களுக்கு தான், அதன் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்... உங்களுக்கு அந்த கஷ்டத்தை எல்லாம் தர வேண்டாம்னு தான், மக்கள் ஓட்டு போட மாட்டேங்கிறாங்களோ என்ற, 'டவுட்' வருது!  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அரசியலில் சூழ்நிலைக்கேற்ப தான் கூட்டணி குறித்தெல்லாம் முடிவெடுக்க முடியும். காங்.,குடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய கருணாநிதி, பின், காங்., கோடு கூட்டணி சேர்ந்த வரலாறெல்லாம் உண்டு. ஆக, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பது இயற்கை தான்.டவுட் தனபாலு: 'கூட்டணியே வேண்டாம்' என்று, தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் நம்பி தேர்தலில் நின்று ஜெயித்த ஒரே தலைவர், உங்க முன்னாள் தலைவி ஜெ., மட்டும் தான்... அவரது வழிவந்த உங்களால அந்த, 'ரிஸ்க்' எடுக்க முடியாம தான், இப்படி பூசி மெழுகுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 18, 2025 05:47

சட்ட / நாடாளுமன்றத்தில் கம்யூ. உறுப்பினர்கள் தமிழ்நாட்டு எத்தனை பேர் இருக்கிறார்கள்? முந்திய முறை 25 இப்போது 30/ 40 கோடி வணக்கலாம் என்று பார்த்தால், இவர் என்னமோ ‘கோபுரத்தின் பொம்மை தாங்குகிறது’ என்று எதையோ சொல்லி, கிடைப்பதையும் கெடுத்துவிடுவார் போலிருக்கே நீங்க ஆயிரம் திட்டம் திட்டினாலும், மக்களுக்கு தேர்தலில் ‘சேர வேண்டியதை’ சேர்த்தால்தான் ஓட்டுகளாக மாறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை