உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில், புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கையில் உள்ள, 'இல்லம் தேடி கல்வி'யை செயல்படுத்துகின்றனர். கடனில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், எந்த தகுதியும் இல்லாத தமிழகம் தான், 'எல்லாவற்றிலும் முன்னணி' என, முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போதைய ஆட்சி அகற்றப்படும். விரைவில் துாய ஆட்சி தமிழகத்தில் அமையும்.டவுட் தனபாலு: தமிழகத்தில் துாய ஆட்சி அமையும்னு சொல்றீங்களே... 'அந்த துாய ஆட்சி அமையுறதுக்கு அணில் மாதிரி, நாம் தமிழர் கட்சி இருக்கும்'னு எங்கயும் சொல்ல மாட்டேங்குறீங்களே... 'தனித்துப் போட்டி' என்ற உங்க பிடிவாதம், தி.மு.க., அரசுக்கு அனுகூலமாக அமையுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?பத்திரிகை செய்தி: மாவட்ட பதவிகளில் உதயநிதி ஆதரவாளர்கள் திணிக்கப்படுவதால், தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. ஆட்சி, கட்சி என, இரட்டை குதிரையில் சவாரி செய்யும் துணை முதல்வரால், உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க முடியவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது.டவுட் தனபாலு: அதிவேகம் ஆபத்து என்பது வாகனங்களுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் பொருந்தும்... இன்றைய முதல்வர் ஸ்டாலின், 40 - 45 வருஷங்களா கட்சிக்கு கடுமையாக உழைத்து, படிப்படியாகவே முன்னேறி வந்தார்... அதனால, அவரை எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க... ஆனா, உதயநிதி மூணே வருஷத்துல எட்டிய உயரங்களை, சீனியர்களால ஜீரணிக்க முடியாததே, இந்த பிரச்னைகளுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 36 பைசா உயர்த்தி, கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு, 'ஷாக்' கொடுத்து உள்ளது. தற்போது, 1 யூனிட் மின் கட்டணம், 5 ரூபாய் 90 காசாக உள்ளது. யூனிட்டிற்கு, 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பதன் வாயிலாக, 6 ரூபாய், 26 பைசாவாக உயர்ந்து உள்ளது. இந்த கட்டண உயர்வு, வரும் ஏப்ரல், 1 முதல் அமலுக்கு வருகிறது.டவுட் தனபாலு: சரியா போச்சு... நாளைக்கு தமிழகத்துல மின் கட்டணத்தை ஏத்தினாலும், கர்நாடகா அரசு ஏத்திய கட்டணங்களை உதாரணம் காட்டி, தமிழக அரசு, 'சால்ஜாப்பு' சொல்லிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
மார் 24, 2025 23:38

2026 ல் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற சந்தேகம் திமுக காரங்ளுக்கே இருக்கு. எனவே தான் உதயநிதி திணிப்பை பெரிது படுத்தாமல் அடங்கிப்போவது போல், புகழ்ந்து பேசி ஆட்சியிலிருக்கும் போதே முடிந்தவரையில் அவனவன் சூருட்டுவதில் தீவிரமாக இறங்கிவிட்டான். தலைமையும் கண்டுகொள்வதில்லை.


Anantharaman Srinivasan
மார் 24, 2025 23:21

தமிழ்நாட்டின் நலன் கருதி திமுக வை ஆட்சியை விட்டு அகற்ற சீமான் ஒரு நல்ல கூட்டணி அமைய முயல வேண்டும்.


N Sasikumar Yadhav
மார் 24, 2025 07:17

அனைத்து விலைவாசிகளும் இலவசத்திற்கும் ஓசிக்கும் ஆசைப்பட்டு ஆட்டய போட மட்டுமே தெரிந்த தற்குறிகளுக்கு ஓட்டுப்பிச்சை போட்ட மக்களால் வந்த வினை இது. ஆகவே விலையேற்றத்தை தாங்கி கொள்ள வேண்டும். மக்கள் திருந்தும் வரை இது தொடரும்


D.Ambujavalli
மார் 24, 2025 06:21

முதல்வரின் மகனுக்கு உள்ள தகுதிகள் எதுவும் தங்களுக்கோ தங்கள் வாரிசுகளுக்கோ இல்லையா? இந்த மூன்று ஆண்டுகளுக்குள் அவர் சாதனை நாயகராக்கப்பட்டு துணை முதல்வரிற்கும் வரை தூக்கிவைத்தால், ஐம்பது, அறுபது ஆண்டுகளாக கட்சியே கதியென்று உழைத்த சீனியர்களும், தொண்டர்களும் குடும்பத்திலேயே அதிக சர்வீஸ் போட்ட கனிமொழி வரை, குமுறுவதில் வியப்பென்ன ?


Sridhar
மார் 24, 2025 15:39

அவங்க அவங்க நோக்கத்துல தெளிவா இருக்காங்க. ஊர் குருவி பருந்தாக முடியாதுனு சரியா புரிஞ்சிகிட்டு ஆசைகளை கட்டுப்படுத்திகிட்டு அவரவர்கள் தங்கள் ஏரியாவில் எவ்வளவு அடிக்கமுடியுமோ அதை செய்துகொண்டு அதற்க்கு மேல் ஆசையை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். கட்சி கட்டுக்கோப்பாக செல்வதற்கு இந்த மனநிலை ரொம்பவே முக்கியம் அல்லவா? பார்க்கப்போனால், வாரிசு தலைமை முறையில் உள்ள மிகப்பெரிய அனுகூலமே கட்சியின் கட்டுகோப்புதான். ஊழலும் கொள்ளைகளும்தான் அதன் கோந்து. UPA கூட்டணிகூட 10 வருசம் உடையாமல் இருந்ததற்கும் இந்த கோந்துதான் காரணம். பிஜேபி போன்ற கட்சிகள்ல இன்று வரை மாநில தலைவர்களையே நியமிக்க முடியாமல் திணறும் நிலை நீடிக்கிறதே? இதுபோன்ற விசயங்கள் தீமுகாவில் நடக்குமா? ஆகவே, வாரிசு தலைமையை குறை சொல்லாதீர்கள். அதேபோல் வாரிசு யார் என்பதும் முக்கியம். பெரிய வீட்டில் பிறந்த ஆண்களே வாரிசுகள் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.


முக்கிய வீடியோ