உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முதல்வர் ஸ்டாலின்: வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 200, 220 இடங்களில் வெல்லும் என, இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அதில் என்ன கஞ்சத்தனம்? 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன் என்றால், செல்லும் இடங்களில் எல்லாம், அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது, நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியை பார்க்கும்போது, உள்ளபடியே மெய்சிலிர்த்துப் போகிறேன். டவுட் தனபாலு: நீங்க போகும் இடங்களில் கூடும் மக்கள் எல்லாம், தானா சேர்ந்த கூட்டமா...? அந்தக் கூட்டத்தை திரட்ட, உங்க கட்சியின் மாவட்டம் துவங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை என்ன பாடு படுறாங்க, எவ்வளவு செலவு பண்றாங்க என்பது, 50 வருஷத்துக்கும் மேலாக பொதுவாழ்வில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் பாலசுந்தரம், போலீசில் அளித்த புகார்: சில தினங்களுக்கு முன், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம், தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பொது இடத்தில், பீர் பாட்டிலுடன் கறி விருந்து வழங்கி உள்ளார்; இது, சட்டப்படி குற்றம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: நீங்க தந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, எம்.எல்.ஏ., மேல போலீசார் நடவடிக்கை எடுப்பாங்கன்னு எதிர்பார்த்தால், ஏமாந்துதான் போவீங்க... எதிர்க்கட்சியா இருக்கிற நீங்க, உங்க கடமையை செஞ்ச மாதிரி, போலீசாரும் செய்வாங்களா என்பது, 'டவுட்'தான்!தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: கோவை கிழக்கு மாவட்டத்தில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்கவில்லை. கட்சி மாறி வந்த சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகி ஒருவர், இதற்காக பணம் பெற்று இருப்பதாக சொல்கின்றனர். கட்சியில் சேர்ந்து இரண்டு மாதமே ஆன ஒரு பெண்ணுக்கு, மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் இப்படி பல இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு, நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது.டவுட் தனபாலு: 'நாங்க ஆட்சிக்கு வந்தால், லஞ்சம், ஊழல் இருக்காது... கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரங்க'ன்னு நடிகர் விஜய் முழங்குறாரு... ஆனா, இவரது நிர்வாகிகள், கட்சி பதவிக்கே, 'கை' நீட்டுறாங்களே... தப்பித் தவறி இவங்க எல்லாம் ஜெயிச்சு, கோட்டைக்கு போயிட்டா தமிழகம் தாங்குமா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

HoneyBee
மே 03, 2025 16:32

ப்ரோ எல்லாம் எங்களுக்கு தெரிந்து தான் நடக்குது... பணம் பணம் பணம் பணம் இதுதான் முக்கியம் பிகுலு


RAMAKRISHNAN NATESAN
மே 03, 2025 08:34

50 வருஷத்துக்கும் மேலாக பொதுவாழ்வில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா என்ற, டவுட்தான் வருது ....... மன்னர் வாழ்வது கனவுலகில் ......


Rajan A
மே 03, 2025 08:14

What bro இதையெல்லாம் பெருசா எழுத வேணாம் bro.


D.Ambujavalli
மே 03, 2025 06:32

234 இடத்தையும் பிடிப்பதாக கனவு காண்பது இருக்கட்டும், தங்கையையும், தலைக்குத் தலை வாயாலேயே கட்சிக்கு குழி வெட்டும் சீனியர்களை சமாளித்து கட்சியை முழுசாக 2026 வரை கொண்டு செல்ல முடியுமா பாருங்கள்


Rajan A
மே 03, 2025 08:16

இத நம்பி இப்படி பதிவு போட வேண்டும் என்பதே அதன் நோக்கம். பேஸ்மண்ட் வீக்குனு எப்பவோ தெரியும். இருந்தாலும் தைரியம் இருக்கிறா மாதிரி காட்ட வேண்டாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை