உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: 'நீட்' தேர்வை, அ.தி.மு.க.,வும் வேண்டாம் என்று தான் சொல்கிறது. ஆனாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசு பள்ளி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. தரம் உயர்த்தினால், மாணவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்; ஆனால், தங்களை தகுதிபடுத்தி கொள்வர். எதிர்காலத்தில் நீட் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவர்.டவுட் தனபாலு: அது சரி... அடுத்த ஆண்டு சட்டசபை தேர்த லில், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாகிட்டால், 'நீட் தேர்வை ரத்து பண்ண சொல்லி, எதிர்க்கட்சிகள் நெருக்கடி தரும்... 'அதெல்லாம் முடியாது'ன்னு சொல்றதுக்கு இப்பவே தயாராகுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!பத்திரிகை செய்தி: தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்து ஓட்டுகளை குவிக்கும் தி.மு.க., அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு அபாரமான திட்டத்தை தயாரித்துள்ளது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையுள்ள கட்சி நிர்வாகிகள், தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் காது குத்து, மஞ்சள் நீராட்டு, திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்டாயம் ஆஜராகி வாழ்த்து தெரிவித்து, கைநிறைய மொய் எழுதுமாறு, தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது.டவுட் தனபாலு: அது சரி... எங்க மாவிலை கட்டியிருந்தாலும், அழைப்பே இல்லாம ஆஜராகி, தேர்தல் நேரத்துல வாக்காளர்களுக்கு பண்ற பட்டுவாடாவை இப்பவே அட்வான்சா கொடுக்கச் சொல்றாங்களோ... ஆளுங்கட்சியினரின் மொய்யை எதிர்பார்த்தே, தமிழகம் முழுக்க விழாக்கள் களைகட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தி.மு.க., அரசில், நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதியால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான், 2026ல் மக்களை சந்திக்க ஒரே வழி. தி.மு.க., கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணி தான். எஞ்சி இருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியதும் மிகவும் முக்கியம்.டவுட் தனபாலு: என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகமா இருக்கு... குறிப்பா, பழைய பென்ஷன் திட்டம் கிடைக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பு ஓட்டுகள், உங்க கூட்டணிக்கு வேட்டு வச்சிடும்னு நீங்க பயப்படுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
மே 13, 2025 07:54

மக்கள் மூடர்களானால் அறிவிலியானால் ஏமாளியானால் மட்டுமே இது நடக்கும்


D.Ambujavalli
மே 13, 2025 04:07

தங்கள் கையை கடிக்காமலும், ஒரே சமயம் கோடிகளை காட்டி அமலாக்கம், வ. வரி என்று அனாவசிய அழைப்பு விடுக்காமலும் இந்த ‘பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல்’ பட்டுவாடா முயற்சியால், நிர்வாகிகள் அழையா விருந்தாளியாக நுழைந்து எத்தனை வீடுகளில் மூக்குடைப்படப் போகிறார்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை