உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்; அப்படித்தான் அமைய வேண்டும். அதுதான் எங்கள் விருப்பம். விரைவில் என் கட்சி தலைமையில் பலமான கூட்டணி ஏற்படுத்தப்படும்; விரைவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், சட்டசபை தேர்தல் கூட்டணி நிலை குறித்து தெளிவாக அறிவிக்கப்படும். டவுட் தனபாலு: உங்க கட்சி தலைமையில் கூட்டணி அமைக்க போறீங்களா... அ.தி.மு.க., - தி.மு.க., அணியில் இடம் கிடைக்காத உதிரி கட்சிகளை எல்லாம் தொடுத்து மாலையாக்க போறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது... ஆனாலும், அந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் வெற்றி மாலை சூடுவாங்களா என்பது, அதை விட பெரிய, 'டவுட்!'  தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஈசல்திட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்து போன மணியன் என்பவர் உடலை, கரடுமுரடான மலைப்பகுதியில், தொட்டில் கட்டி துாக்கி சென்ற வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், போராடியும், இரு ஆண்டுகளுக்கு முன், 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஆனால், இன்னும் சாலை அமைக்கவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்கு சான்று! டவுட் தனபாலு: சாலை அமைக்கவில்லை என்பது இருக்கட்டும்... அதற்காக ஒதுக்கிய, 59 லட்சம் ரூபாய் எங்கு போச்சுன்னு தெரியுமா... அரசுக்கே திருப்பி அனுப்பிட்டாங்களா அல்லது போடாத சாலையை போட்டதா சொல்லி, இடையில யாராவது தின்று, 'ஏப்பம்' விட்டுட்டாங்களா என்ற, 'டவுட்' தான் வருது!  பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை எப்படி அழைக்க வேண்டும் என்பதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. 'மக்கள் தொண்டர், மக்கள் தளபதி, எழுச்சி தளபதி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என, பல அடைமொழிகளை எழுதி, அவரிடம் கொடுத்துள்ளனர். இதில், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' அடைமொழியை விஜய் தேர்வு செய்துள்ளார். டவுட் தனபாலு: சென்னை பனையூர் கட்சி ஆபீசில் நாலு சுவருக்குள் அமர்ந்து கொண்டு, அவரே, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்னு முடிவு பண்ணிக்கிட்டாரா... தமிழகம் முழுக்க சுற்றி வந்து, மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தால், மக்களே வெகுமதியா விஜய்க்கு ஒரு பட்டத்தை தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
ஜூலை 25, 2025 16:30

ஆயிரம் கோடிகளையே அனாயாசமாக ‘விழுங்கும்’ எங்களுக்கு வெறும் 59 லட்சம் dessert ஆகக்கூட போதாது பெரிசா கொடுத்துட்டாங்களாம், இவரும் கணக்கு கேட்கிறாராம் கட்சி தொடங்கி, முழுசாக ஒரு பஞ்சாயத்து தேர்தலைக்கூடப் பார்க்கவில்லை அதற்குள் பட்டம் இல்லாமல் அவரை அழைத்தால் குறைந்துவிடுமா ?


HoneyBee
ஜூலை 25, 2025 11:28

வரி ஏய்ப்பு நாயகன். இதை அந்த விஜய் செலக்ட் செய்தால் நன்றாக இருக்கும்


மூர்க்கன்
ஜூலை 25, 2025 11:25

அண்ணாமலை கொஞ்சம் பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தான் பக்கம் போவோமா?? ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவ, மாணவியர் வழக்கம்போல் பாடம் படித்துக்கொண்டிருந்தனர். காலை 8.45 மணியளவில் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பள்ளி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாண விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், கிராம மக்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவ-மாணவியர், ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 17 மாணவ, மாணவியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்ச சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


karupanasamy
ஜூலை 25, 2025 17:25

மூர்க்கா அந்த பள்ளிக்கட்டிடம் முந்தைய தீய முக கூட்டணி கட்சி ஆட்சியின் போது கட்டியது.


Venkatraman Ravishankar
ஜூலை 25, 2025 09:34

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை எப்படி அழைக்க வேண்டும் என்பதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. மக்கள் தொண்டர், மக்கள் தளபதி, எழுச்சி தளபதி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தம்பி அந்த டாக்டர் பட்டத்தை மறந்துட்டீங்களே ..... Sorry டாக்டர்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை