உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க.,வில் இணைந்துள்ள மைத்ரேயன்: அ.தி.மு.க.,வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அங்கு எனக்கு அமைப்பு செயலர் பதவி தந்தனர்; ஆனால், என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான், அங்கிருந்து வெளியே வந்தேன். பிரசார பயணத்துக்காக அழைத்து வரப்படும் கூட்டத்தை பார்த்து, எம்.ஜி.ஆர்., - ஜெ., போல, தன்னையும் ஒரு பெரிய தலைவர் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைத்து கொண்டிருக்கிறார்; உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்து ஆகாது. டவுட் தனபாலு: 'ஊர்க்குருவி பருந்தாக முடியாது' என்பது உங்களுக்கும் பொருந்துமே... அதனால தானே, ஏழாவது முறையா கட்சி மாறியிருக்கீங்க... இங்கயும் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காம போனா, எட்டாவது முறையாகவும் கட்சி மாற தயங்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!  பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு: பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைமை நிர்வாகிகள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள், 108 மாவட்ட செயலர்களில், 102 பேர், 3,800 பொதுக்குழு உறுப்பினர்களில், 3,640 பேர் என, ஒட்டுமொத்த நிர்வாகிகள் அன்புமணியோடு இருக்கின்றனர்; இதில், ராமதாஸ் உரிமை கோர எதுவும் இல்லை. டவுட் தனபாலு: கட்சி நிர்வாகிகள், உங்க பின்னாடி இருக்கலாம்... ஆனா, கால்தேய கட்சியை வளர்த்த ராமதாஸ் பின்னாடி தான், தொண்டர்கள் பட்டாளம் நிற்கிறதா அவங்க சொல்றாங்களே... தேர்தலின் போது, நிர்வாகிகள் சீட் தான் கேட்பாங்க... தொண்டர்கள் தான் வேலை செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!  பத்திரிகை செய்தி: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29ல் வெற்றி பெற்றது. அந்த, 41 இடங்களிலும் தற்போது தே.மு.தி.க.,வின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவே, 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' சுற்றுப்பயணத்தை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா மேற்கொண்டுள்ளார். அந்த, 41 தொகுதிகளிலும், தே.மு.தி.க.,வுக்கு செல்வாக்கு சரியவில்லை என்று காட்டி, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,விடம் அதிக, 'சீட்'கள் பெற திட்டமிட்டுள்ளார். டவுட் தனபாலு: விட்டா, 'அந்த, 41 தொகுதிகளையும் சிந்தாம, சிதறாம மறுபடியும் தே.மு.தி.க.,வுக்கு தந்துடுங்க'ன்னு கூட கேட்பார் போலிருக்கே... 2011க்கு அப்புறம் தமிழகத்துல சீமான், நடிகர் விஜய் எல்லாம் கட்சிகள் துவங்கி, விஜயகாந்த் ரசிகர்களின் ஓட்டுகளை பங்கு போட்டுக்கிட்டது பிரேமலதாவுக்கு தெரியாதோ என்ற, 'டவுட்'தான் வருது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஆக 16, 2025 19:46

பிரேமலதா திமுக கூட்டணியில் 10+1 சீட் கிடைக்குமென்று மலைபோல் நம்பியிருக்கார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் "ஃபார் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டுமென்று நிர்பந்தம் வரும். அன்று கதை இலவு காத்த கிளி போலாகும்.


D.Ambujavalli
ஆக 16, 2025 17:02

இன்னும் விஜய் கட்சி கூட பாக்கி இருக்கே அந்தப்பக்கம் போக ஏதாவது வழி இருக்கா என்று பார்க்கிறார் விஜயகாந்தின் செல்வாக்கு அவர் மகன்களுக்கே இல்லை, இதில் எவர் இவர்களுக்கு சீட் தூக்கிக் கொடுப்பார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை