உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கூட்டணி ஆட்சியை, வெறும் முழக்கமாக மட்டுமே பேச முடியாது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் தலைமை யில் தான் கூட்டணி அமைகிறது. இரு கட்சிகளுக்கும், எங்களை போன்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி, அதிகாரத்தையும் கூட்டணி கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். டவுட் தனபாலு: 'அதிகாரத்தில் பங்கு தந்தால் தான் கூட்டணிக்கு வருவோம்'னு ரெண்டு கட்சிகளிடமும் நீங்க நிபந்தனை விதிச்சு பார்க்கலாமே... ஆனா, அப்படி நீங்க நிபந்தனை விதிச்சாலும், 'அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்கு வேண்டாம்'னு போனாலும் போவாங்களே தவிர, ஆட்சியில் பங்கு மட்டும் தரவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: 'திரு வண்ணாமலை, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களை நிர்வகிக்க, அறநிலையத் துறைக்கு பதில், தேவஸ்தானம் போர்டு அமைக்கலாம்' என்ற சென்னை உயர் நீதிமன்ற கருத்தை வரவேற் கிறேன். ஹிந்து அறநிலையத் துறையே கூடாது என்பது தான் , பா.ஜ.,வின் நிலைப்பாடு. 2026ல் பழனிசாமி முதல்வரானதும், அது நிச்சயமாக நடக்கும். டவுட் தனபாலு: முதல்வர், அமைச்சர்கள் மட்டும் மாறுவாங்களே தவிர, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள்ல பெருசா எந்த வித்தியாசமும் இருக்காது... அதனால, 'டாஸ்மாக்' மற்றும் அறநிலையத் துறை போன்றவற்றின் நிர்வாகத்தில் மாற்றம் வரும்னு எதிர்பார்த்தால், நீங்க ஏமாந்து போவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த, நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு, 37,307 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. அதே நேரத்தில், குஜராத்திற்கு, 2,89,110 கோடி; மஹாராஷ்டிராவுக்கு, 1,65,655 கோடி; உத்தர பிரதேசத்திற்கு, 56,900 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளன. பிற மாநிலங்கள் எல்லாம் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறி கொண்டிருக்க, தமிழகம் பின்தங்கி உள்ளது. டவுட் தனபாலு: நீங்க சொல்ற எல்லாமே, பா.ஜ., ஆளும் மாநிலங்கள்... அந்த மாநில முதல்வர்கள் எல்லாம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்காணிப்பில் இருப்பதால், முறைகேடுகளுக்கு இடமில்லாம , தொழில் துவங்க உடனே அனுமதி கொடுத்துடுவாங்க... நம்ம ஊர்ல அப்படியா... முதல்வரை சந்திக்கும் முன், எத்தனை அதிகார நந்திகளை பார்த்து, 'தட்சணை' வைக்கணும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
செப் 02, 2025 00:55

திருமா.. ஜோசப்விஜய் தான் ஆட்சியில் பங்கு துணைமுதல்வர் பதவினு உன் ஆசைக்கு வலை விரிக்கிறாரே.. போய்தான் பாரேன்.


Venkat
செப் 01, 2025 19:01

அதிகார நந்தி, தக்ஷிணை ...... very good words to describe today officials...


D.Ambujavalli
செப் 01, 2025 17:12

234 தொகுதிகளில் 120, 130 என்று தலைமைக்கட்சிகள் வெல்லுமாம், இவர் கூட்டணியால் ஒரு 8, 10 தொகுதிகூட வெல்ல முடியாது இவருக்கு, இவரது வேட்பாளருக்கோ அமைச்சர் பதவி தூக்கிக் கொடுக்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள் இவரால் வரும் சில ஆயிரம் ஓட்டுகளுக்காக பேரம் பேசி ஏலத்தில் வெல்பவருக்கு ஆதரவு கொடுப்பதோடு நிற்கவேண்டும் அவ்வளவு தன்னம்பிக்கை உள்ளவர் தனித்து நின்று விஜயகாந்த் போல ஒருமுறையாவது 10, 15 இடம் ஜெயித்துக்காட்டட்டுமே


சமீபத்திய செய்தி