உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலைமைக்கு காரணம், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் தான். திருடர்களிடம் ஆட்சியை கொடுத்து, தலை குனிந்து இருக்கிறோம். தேர்தலில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும்; நிச்சயமாக, 2026ல் கூட்டணி அமைச்சரவை தான் அமையும். டவுட் தனபாலு: கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், தமிழக அரசை விமர்சிக்கிறதுல அடக்கி வாசித்தீங்க... இப்ப, 'ஆட்சியை மாற்றி ஆகணும்'னு அறைகூவல் விடுக்குறீங்களே... பீஹாரில், தே.ஜ., கூட்டணிக்கு கிடைத்த இமாலய வெற்றியால், தமிழகத்தில் அந்த கூட்டணியில் ஐக்கியமாகும் முடிவை எடுத்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எந்த பின்னணியில், த.வெ.க.,வில் செங்கோட்டையன் இணைந்தார் என தெரியாது. ஆனால், தமிழக அரசியலில் நடக்கும் ஒவ்வொரு நகர்விலும், பா.ஜ., வின் கைகள் உள்ளன. அ.தி.மு.க., வின் குழப்பமான மற்றும் விமர்சிக்கப் படும் நிலைக்கு, பா.ஜ.,வும் ஒரு காரணம். தமிழகத்தை குறி வைத்து, பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார்கள், அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. டவுட் தனபாலு: 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'னு கிராமங்கள்ல சொல்லுவாங்க... அந்த மாதிரி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முகாமில் எந்த விவகாரம் நடந்தாலும், பா.ஜ., மீது பாயலைன்னா உங்களுக்கு துாக்கமே வராதோ என்ற, 'டவுட்'தான் எழுகிறது! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'நான் மட்டுமே என ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தண்டிப்பார்' என, செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தியா, கருத்து சுதந்திரம் உள் ள ஜனநாயக நாடு. செங் கோட்டை யன் கூறியது, அவருடைய கருத்து. அது போல், ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. அவர், அ.தி.மு.க., வில் இல்லை; அவரை பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. டவுட் தனபாலு: கட்சி ஒருங்கிணைப்புக்காக, உங்களிடம் செங் கோட்டையன் பல முறை கெஞ்சாத குறையா குரல் கொடுத்தும், நீங்க கேட்காம போன வெறுப்புல தான், விஜய் கட்சியில் போய் சேர்ந்துட்டாரு என்பதில், 'டவுட்'டே இல்லை... இனியாவது, கட்சியில் மாற்று கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து, இருக்கும் தலைவர் களையாவது தக்கவைக்க பாருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
டிச 01, 2025 15:23

அதிமுக விற்கு தான் மட்டுமே தலைவனாகயிருக்க வேண்டுமென்பது எடப்பாடி எண்ணம். முதல்வராக முடியாவிட்டாலும் எதிர்கட்சி தலைவராகயிருந்து அந்த சலுகைககளை அனுபவிக்க பிளான்.


oviya vijay
டிச 01, 2025 09:55

ஆர் எஸ் எஸ், பீ ஜே பீ, ஆரியன் அப்டினாலே குருமா வுக்கு குலை நடுங்கும்.. .பாவம்


ellar
டிச 01, 2025 09:37

தினமலரின் கருத்து மிகவும் சரி கடந்த ஒரு மாதமாக திருமாவளவன் தனது கட்சி வேலைகளையே கவனிக்காமல் எதிர்க்கட்சியை பற்றி மட்டுமே முழுநேரம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் தொடர்ந்து பயணம் செய்வதில் பிரச்சனை போல் இருக்கிறது


D.Ambujavalli
டிச 01, 2025 06:03

தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மைய அரசு என்ற பல்லவியின் அடுத்த version போல இந்த ‘பிஜே எல்லாவற்றிலும் சம்பந்தப்பட்டுள்ளது’ என்பதும்


முக்கிய வீடியோ