உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: தமிழகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை, 2003ம் ஆண்டுக்கு பின், நிறைவேற்றாமல் இருந்துள்ளனர். தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற தவறி விட்டனர். 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பற்றி பேசுவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் யாருக்கும் தகுதி இல்லை. டவுட் தனபாலு: அரசு ஊழியர்களின், 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறியிருக்கு என்பது வாஸ்தவம் தான்... ஆனா, 2006 - 2011 வரை, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்து, கருணாநிதி முதல்வரா இருந்தாரே... அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதில் அவருக்கும் பங்கிருப்பதை ஏத்துக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பும், விரக்தியும் நிறைந்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் குறித்து, தி.மு.க., என்ன தான் சொன்னாலும், மக்கள் நம்ப மாட்டார்கள். 100 நாள் வேலையை, 125 நாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அதை, 150 நாட்களாக உயர்த்துவோம். டவுட் தனபாலு: வேலை நாட்களை உயர்த்திய மத்திய பா.ஜ., அரசு, அதற்கான சம்பளத்தில் 40 சதவீதத்தை மாநில அரசே ஏத்துக்கணும்னு, சுமையை துாக்கி வச்சிருக்கு... இது, மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துமே... ஆனாலும், 'நாம ஆட்சிக்கு வந்தால் பார்த்துக்கலாம்'னு அதை கண்டுக்காம இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! l தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: எம்.ஜி.ஆர்., போலவே விஜய்க்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான். ஒரு படத்துக்கு, 250 கோடி ரூபாய்; ஆண்டுக்கு நான்கு படம் நடித்தால், ௧,௦௦௦ கோடி ரூபாய் பெறும் விஜய், மக்களுக்காக அதை துாக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். டவுட் தனபாலு: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு வர மறுக்கும் விஜயை எப்படி வளைக்கலாம்னு, மத்திய பா.ஜ., அரசு யோசிக்கிறதா சொல்றாங்க... 'படத்துக்கு, 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்'னு, வருமான வரித்துறைக்கு நீங்களே, 'எடுத்து' கொடுக்கிறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAVINDRAN.G
ஜன 06, 2026 13:13

இந்த இரு தரித்திர திராவிட கட்சிகளும் ஒழிந்தால் தான் நாடு உருப்படும். அதற்கு ஒருமுறை விஜய்க்கு ஓட்டு போடுவதுதான் சரி.


raja
ஜன 06, 2026 09:17

ஆயிரம் கோடி என்ன பிசாத்து காசு.. அவரு திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் போல 1.76 லட்சம் கோடிகளில் கொள்ளை அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் வந்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியுமே...


D.Ambujavalli
ஜன 06, 2026 06:33

பேசாமல் ரஜனி போல ஆண்டுக்கு 4 படம் செய்து 1000 கோடி சம்பாதிக்காமல் என்ன பெரிய மக்கள் சேவை செய்துவிடப் போகிறார்? நான் வந்தால் மகதுக்கடைகளை மூடுவேன் என்று எழுதிக்கொடுப்பாரா? ஆளும் கட்சியை எதிர்த்து வசனம் பேசிவிட்டாலே முதல்வர் ஆகிவிடுவோம் என்று எண்ணுகிறாரா? இன்னொரு கமல் ஆகும் நிலைதான் வரும்


முக்கிய வீடியோ