உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: கூட்டணி அமைப்பதில், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. வெற்றி கூட்டணியை கண்டறிவதில் தான் சிக்கல்; அதனால் தான் தாமதமாகிறது. அனைத்து தரப்பிலும் பேச்சு நடத்தி வருகிறோம். இறுதி முடிவு வரும் வரை, வெளியில் சொல்வது நன்றாக இருக்காது. டவுட் தனபாலு: 'நாங்க இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியில் அமரும்'னு சொல்லாம அடக்கி வாசிக்கிறீங்களே... இதுல இருந்தே, உங்க கட்சி முழுக்க அன்புமணி வசம் போயிடுச்சு என்பதுடன், ராமதாசுடன், உங்களை போன்ற பழம் தலைவர்கள் மட்டும் தான் இருக்காங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுதே! தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, முதல்வர் ஸ்டாலினிடம் தொகுதி பங்கீடு குறித்து ஒரு முறை பேச்சு நடத்தியுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி ராகுலுடன், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியிருக்கிறார். பேச்சு தொடர்ந்து நடக்கிறது; சுமுகமான முடிவு வரும். காங்கிரஸ் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும், த.வெ.க.,வுடன் பேசவில்லை. சிலரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, த.வெ.க.,வுடன் பேசி விட்டதாக கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைமை தெளிவாக உள்ளது. டவுட் தனபாலு: ஆனாலும், '40 சீட்கள், மூன்று அமைச்சர் பதவிகள் வேண்டும்'னு ராகுல் அடம் பிடிக்கிறதா சொல்றாங்களே... அதனால, அதிகாரப்பூர்வமா தி.மு.க., தலைமையுடனும், அங்கீகரிக்கப்படாத நிர்வாகிகளை விட்டு, த.வெ.க.,வுடனும் பேசிட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவக்கினார். அதை தெரிந்து கொண்டு, அக்கட்சி கூட்டணி முடிவை எடுக்கும் என நினைக்கிறேன். அ.தி.மு.க., கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். ஆனால், கூட்டணிக்காக மடிப்பிச்சை ஏந்தும் அளவுக்கு அ.தி.மு.க., பலவீனமாக இல்லை. 'எங்களால் தான் வெற்றி கிடைக்கும்' என்பவர்கள், இன்னும் ஆறு மாதங்கள் கழித்து கூட முடிவு எடுக்கலாம். டவுட் தனபாலு: அது சரி... 'நாங்க இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும்'னு தே.மு.தி.க.,வின் பிரேமலதா தான் ஜம்பமா சொல்லிட்டு இருக்காங்க... 'தேர்தல் முடிஞ்ச பிறகு முடிவு எடுங்க'ன்னு, அவங்களைத் தான் நீங்க கிண்டல் பண்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
பிப் 03, 2026 15:03

ஓடிக்கிட்டே இருப்பாங்க. மழை வரப்போகிறது என தெரிந்தவுடன் ஏதாவது ஒரு ஷெட்டின் கீழ் ஒதுங்கிவிடுவார்கள் . அதுதான் வெற்றி ஷெட் .


RAVINDRAN.G
பிப் 03, 2026 12:49

டாக்டர் ஐயாவுக்கும் தேமுதிக கட்சி பிரேமலதாவுக்கும் அவர் கட்சிமேலயே நம்பிக்கை இல்லை. தன்னோட கட்சிதான் ஜெயிக்கும் என்று நம்பிக்கை இருந்து இருந்தால் தைரியமான முடிவெடுத்து தனி கூட்டணியே உருவாக்கி இருக்கலாமே எதற்கு இவ்வளவு யோசனை பண்ராருன்னு மக்களுக்கு இப்போ புரிந்திருக்கும்.


Anantharaman Srinivasan
பிப் 03, 2026 12:24

பாமகவும் தேமுதிகவும் தாங்கள் இடம்பெரும் கூட்டணிதான் வெற்றிபெரும் என்று வாய் ஓயாமல் புலம்புகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு 2 To 3% ஓட்டு வங்கி கூட இருக்க சாத்தியமில்லை.


D.Ambujavalli
பிப் 03, 2026 06:12

Back up ஏற்பாடாக த .வெ . க வொளுமே துண்டு போட்டு வைப்போம் என்று unofficial ஆக அங்கும் பேச்சு வார்த்தை பிரேமலதாவின் technic ஐ இவர்களும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை