உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இணை பொதுச்செயலர் நிர்மல்குமார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அரசு செலவில், 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் போன்று குறிஞ்சி இல்லம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு, அதிகாரிகள் சந்திப்பு நடத்துவதற்கு தான் அந்த இல்லம். ஆனால் உதயநிதி, அந்த இல்லத்தில் உள்ள புல் தரையில், நாயுடன் விளையாடி, போட்டோ எடுத்து வெளியிடும் பணிகளை மட்டுமே செய்கிறார். இப்படி அரசு பணம் பல வழிகளிலும் வீணடிக்கப்படும் அக்கிரமம் நடக்கிறது. டவுட் தனபாலு: நாயுடன் விளையாடியதில், அரசு பணம் எப்படி வீணாகும்னு, 'டவுட்' வருதே... உங்க தலைவர் விஜயை நம்பி, கிட்டத்தட்ட, 400 கோடி ரூபாயை முடக்கி, ஜனநாயகன் படத்தை எடுத்த தயாரிப்பாளர், படம் ரிலீசாகாததால, அந்த பணத்துக்கு வட்டி மேல வட்டி கட்டிட்டு இருப்பது, உங்களுக்கு வீண் செலவா தெரியலையா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: 'தி.மு.க.,வை அழிப்பதற்கு தான் விஜயகாந்த் கட்சியே ஆரம்பித்தார்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது கருத்து. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும், தே.மு.தி.க., நட்பாகவே உள்ளது. இதில், மாநில கட்சி, தேசிய கட்சி என்ற வேறுபாடு கிடையாது. தே.மு.தி.க., எதிர்காலம் கருதி, கட்சியினர் விருப்பப்படி, கூட்டணி முடிவை எடுப்போம். டவுட் தனபாலு: உங்க கட்சியின் பலத்தை மீறி, ரெண்டு திராவிட கட்சிகளிடமும் கூடுதல் சீட்கள் கேட்டு நீங்க அடம் பிடிக்கிறதால தான், கூட்டணி முடிவு தாமதம் ஆவதாக தகவல்கள் பரவுதே... சீக்கிரமா ஏதாவது ஒரு கூட்டணி ரயில்ல ஏறிடுங்க... இல்லாட்டி, காலி பிளாட்பாரத்துல நிற்க வேண்டிய சூழல் வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு, சுமுகமாக நடந்து வருகிறது. பேச்சு நடத்த, தி.மு.க., சார்பில் விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவில் உள்ளவர்களுடன் தொடர்ந்து பேசுவோம். மோடி அரசுக்கும், பா.ஜ.,வுக்கும் என்றைக்கும் தொங்கு சதையாக இருக்கிற அ.தி.மு.க., உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். டவுட் தனபாலு: தமிழகத்தில் காங்., கட்சி மட்டும் தனித்து, சுயமா இயங்குதா... காலம், காலமா தி.மு.க., முதுகில் ஏறி சவாரி செஞ்சு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்னு பதவி சுகத்தை அனுபவிக்கிற நீங்க, மாற்று கட்சியை தொங்கு சதை என விமர்சிக்கலாமா என்ற, 'டவுட்' வருதே!l


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
பிப் 07, 2026 19:22

Work pressure தீர.தினமும் நாயுடன் 20 Minutes relax பண்ணச்சொல்லி Doctors advice என்று கூட சொல்வார்கள்.


RAVINDRAN.G
பிப் 07, 2026 11:26

இந்த தேர்தலோடு தேமுதிகவின் கதை முடிந்துபோகும். அதுமட்டும் அல்ல வெத்து வெட்டு காங்கிரஸ், உதவாக்கரை விசிக, உண்டியல் கட்சிகள், ஒத்தை ரெண்டு சீட்டுக்கு ஆலாய் பறக்கும் முஸ்லீம் லீக், ம நீ ம , ம நேய மக்கள் கட்சி, தா வா கட்சி வேல்முருகன் போன்ற உதிரி கட்சிகள் நாட்டுக்கு தேவையே இல்லை. ரெண்டு கட்சி ஆட்சிமுறைதான் வேண்டும். தொகுதிக்கு 1000 ஓட்டு வச்சி இருக்கிறவங்க போடும் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. ரெண்டு பெரிய கட்சிகளும் தயவு தாட்சணியம் இல்லாம கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுடுங்க


கண்ணன்
பிப் 07, 2026 11:03

விளையாடவா மக்கள் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது,


Rajan A
பிப் 07, 2026 09:10

எப்படியும் விஜயகாந்த் நேரில் வந்து சொல்ல போவதில்லை. தொண்டர்கள் கருத்தை கண்ணாடி முன்பு நின்று தெரிந்து கொள்வார். விரைவில் காணாமல் போகும் கட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை