உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 2021ல், 198 மனமகிழ் மன்றங்கள் மட்டுமே இருந்தன. ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் மட்டும், 1,000 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வழங்க, 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் வசூலிப்பதாக, 'டாஸ்மாக்' அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மனமகிழ் மன்றங்கள், தி.மு.க., ஆட்சியில் தனியார் மதுக்கடை களாகவே மாற்றப்பட்டு விட்டன . டவுட் தனபாலு: அது சரி... '500, டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்'னு ஒருபக்கம் சொல்லிட்டு, மறுபக்கம் இரண்டு மடங்கா தனியார் பார்களுக்கு அனுமதி குடுத்துட்டாங்களே... அடுத்த அஞ்சு வருஷம் தி.மு.க., ஆட்சி நீடித்தால், டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டு, பழையபடி தனியார் வசம் மதுபான விற்பனையை தாரை வார்த்துடுவாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll பத்திரிகை செய்தி: த.வெ.க., திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலர் உதயகுமார், தன் பிறந்த நாளை, வந்தவாசி பிரதான சாலையில் கொண்டாடினார்; திறந்த காரில், தன் ஆதரவாளர்களுடன் வலம் வந்தவருக்கு, 'கிரேன்' உதவியுடன் மாலை அணிவிக்கப்பட்டது. அதோடு, சாலையில் த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். டவுட் தனபாலு: தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியான அ.தி.மு.க., - தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், அமைச்சர்கள் கூட இப்படி ஆடம்பரமா பிறந்த நாளை கொண்டாடியது இல்லையே... இந்த உதயகுமார் தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ.,வாகிட்டா, தொகுதி மக்கள் கதி என்னவாகும் என்ற, 'டவுட்' எழுதே! lll தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி: தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் என ஏராளமான திட்டங்களை எடுத்து கூற வேண்டும். இப்படி நீளமாக தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லும்போது, மக்களுக்கு துாக்கம் வந்துவிடும்; அதனால், அவர்கள் துாங்காத அளவுக்கு, 'பாயின்ட் பை பாயின்டாக' எடுத்து சொல்ல வேண்டும். எப்போதும் மக்களை விழிப்பாகவே வைத்திருக்க வேண்டும். டவுட் தனபாலு: நீங்க, நிறைவேற்றிய வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்கணும்னு சொல்றீங்க... ஆனா, நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியல் எடுத்து வச்சிருக்கும் மக்கள், 'இதை எல்லாம் ஏன் செய்யல'ன்னு உங்களிடம் கேட்க விழிப்புணர்வுடன் தயாரா இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
பிப் 15, 2026 19:36

திமுக லஞ்ச ஊழல் ஆட்சியில் மனம் வெம்பி தவித்துப்போயிருக்கும் மக்கள் ஓட்டு கேட்டு சாதனை விளக்கம் கொடுக்க வந்தாலே சரிசரி போடறோம் என்று சொல்லி பேசவிடாமல் தவிர்த்து விட வேண்டும்.


duruvasar
பிப் 15, 2026 11:23

எங்கள் தலைவர்தான் தூக்கம் வராமல் இருக்கிறார் எனவே மக்களையும் தூங்க விடாதீர்கள் என எம் எல் ஏ சொல்லவராரோ என்ற டவுட்டு எழவில்லையா


D.Ambujavalli
பிப் 15, 2026 06:38

நீங்கள் 10 நலத்திட்டங்களை சொல்லும்போதே டாஸ்மாக் மரணங்கள், அவலங்கள், வேங்கை வயல், அண்ணா பல்கலை, custody கொலைகள், கற்பழிப்பு, சிறுமியர் பாலின வன்முறை என்று உங்கள் பட்டியலைவிடப் பெரிய பட்டியலுக்குப் பயந்து தலைதெறிக்க ஓடப்போகிறீர்களா, ‘ஐயோ, திமுக ஆட்களா? உள்ளே விட்டால் முறம் துடைப்பம் கோடா மிஞ்சாதே, வாயிற்கதவை ரெட்டை தாழ்ப்பாள் போட்டு மூடி வை’ என்றுதான் மக்கள் ‘வரவேற்பு’ கொடுப்பார்கள்


சமீபத்திய செய்தி