உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தமிழகத்தில், மகளிர் உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மகளிருக்கு, 5,000 ரூபாய் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு தரப்பில் இருந்து தடை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்த பின், இது தொடர்பான தகவலை முதல்வர் வெளியே தெரிவித்துள்ளார். டவுட் தனபாலு: அதாவது, பிப்., மார்ச், ஏப்ரல் மாத தொகை, 3,000த்துடன், கோடை கால செலவுகளுக்காக, 2,000 ரூபாயை சேர்த்து, 5,000 ரூபாயா முதல்வர் தந்திருக்காரு... போன வருஷம் கோடை காலம் வந்தப்ப, 2,000 ரூபாய் தராதது ஏன்... சரி, அடுத்த வருஷம் கோடைக்கும், 2,000 ரூபாய் தருவாரா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே lll பத்திரிகை செய்தி: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் பரிந்துரைத்தவர்களுக்கு, 'சீட்'கள் வழங்கப்பட்டன. ஆனால், இம்முறை கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தான், வேட்பாளர் தேர்வில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்வு செய்தவர்களின் பட்டியல், பழனிசாமியின் மகன் மிதுன் கைகளுக்கு செல்கிறது. அவர் கை காட்டும் ஆட்கள் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். டவுட் தனபாலு: அது சரி... மச்சான், மகனை விட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய சொல்லிட்டு, தி.மு.க.,வை பார்த்து, 'வாரிசு அரசியல், குடும்ப அரசியல்' என்று பழனிசாமி குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே! lll அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், செல்லுார் ராஜு: எந்த கட்சியையும் இரண்டாக பிரிக்கக் கூடியவர்கள், தி.மு.க.,வினர். ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்தனர். காங்கிரசார் இப்போது, தி.மு.க.,வுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புகின்றனர். திருமாவளவன் போர்க்குரல் எழுப்பாமல் அடங்கி விட்டார். போர்க்குரல் எழுப்பினால், தனது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை, தி.மு.க., இரண்டாக உடைத்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார். டவுட் தனபாலு: அது சரி... 2011ல், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அப்புறமா ஜெ., அரசை விமர்சனம் செஞ்சாரு... உடனே, அந்த கட்சியின், ஏழு எம்.எல்.ஏ.,க்களை தனியா இழுத்து, தே.மு.தி.க.,வை ஜெ., உடைச்சதை இவர் மறந்துட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
பிப் 16, 2026 22:52

Law is there to prevent bribing in the name of vote for cash but the problem is someone who got the money has to file case in the court not with Election commission with evidence . Otherwise nothing could be done .


srinivasan
பிப் 16, 2026 16:21

திமுக கொடுத்த பணம் ஓட்டுக்காக என்று எந்த படிக்காத பாமரனுக்கும் தெரியும். இப்படி அரசே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீதிமன்றம் அனுமதிக்கின்றதா? தேர்தல் ஆணையம் ஏன் வழக்கு தொடர்ந்து இந்த அரசை தேர்தலில் போட்டியிட முடியாதபடி செய்யக்கூடாது


D.Ambujavalli
பிப் 16, 2026 05:57

இவர் கட்சியில் மண், மச்சான் என்றால் அங்கு 'மாளிகைப்புறம் , மாப்பிள்ளை' எல்லாம் saame குட்டை same மட்டை இதில் பேச்சென்ன , ஏச்சு என்ன?


முக்கிய வீடியோ