உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார்: வரும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால், என்னோடு பயணித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளேன். என் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன். இந்திய துணை கண்டத்தில் சிறந்த நடிகை இருக்கிறார் என்றால், அது ராதிகா தான். டவுட் தனபாலு: நீங்க தி.மு.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு போனீங்க... அப்புறமா, தனிக் கட்சி துவங்கி, அதை பா.ஜ.,வில் சேர்த்தீங்க... உங்களுடைய எல்லா அரசியல் நகர்வுகளிலும், கூடவே இருந்தவங்க, உங்க மனைவி ராதிகா மட்டும் தான்... அதனால, அவங்களுக்கு சீட் தரணும்னு நேரடியா கேட்காம, இப்படி சுத்தி வளைச்சு சொல்லணுமா என்ற, 'டவுட்' தான் வருது! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: விடுதலை சிறுத்தைகள் ஆளுங்கட்சி அல்ல; ஆள துடிக்கும் இடத்திலும் இல்லை. எங்களுக்கென்று தனி சின்னமாக பானை உள்ளது. அ.தி.மு.க., மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும், அதற்கென்று தனித்தன்மை உள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைவதில் வியப்பில்லை. கொள்கையை பொறுத்தவரை இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான். டவுட் தனபாலு: 'பா.ஜ.,வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சி அ.தி.மு.க., தான்' என்று உங்க கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுறாரு... நீங்களோ, 'ரெண்டு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு'ன்னு சொல்றதன் மூலமா, 'காங்கிரஸ் கட்சியின் அடிமையா தி.மு.க., இருக்கு'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: நடிகர் விஜய், தன் திரைப்பட டிக்கெட்டுகள், 'பிளாக்'கில் விற்கப்படுவதை கண்டுகொள்ளாதவர். அவர் தான், 'லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன்' என்கிறார். மனைவியுடனே கூட்டணி சரியாக இல்லாதவரால், மக்களிடம் எப்படி கூட்டணி வைக்க முடியும்? தலைவனாகும் தகுதியற்ற விஜய், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, த.வெ.க., கடையை இழுத்து மூட வேண்டியது தான். டவுட் தனபாலு: இன்று அரசியலில் இருக்கும் எல்லா தலைவர்களும், தங்களது மனைவியுடன் சுமுகமான உறவில் தான் இருக்காங்க என்பதை இவரால, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா... எத்தனையோ அரசியல்வாதிகளின் குடும்ப தகராறுகள் கோர்ட்டுக்கு வராம, புகைஞ்சிட்டு தான் இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 03, 2026 06:15

சரியாகச் சின்னவர் இரு கட்சிகளும் கொள்கையில் ஒன்றுதான். என்ன , அவர்கள் வழக்கு, தண்டனைகளுக்காக வெளிப்படையாக சேர்த்துக்கொண்டார், இவர்கள் 'வெள்ளைக்குடை' யாத்திரை, நிர்மலா மூலம் தூது என்று பின்வாசல் வழியாக செல்கிறார்கள் தன கட்சியில் எல்லாரும் கிளம்பியபின் மீதி இருப்பது மனைவி மட்டும்தான் , எனவே அவருக்காக சீட் கேட்கிறார். என்ன இருந்தாலும் பளிச்சென்று கேட்க சுய கவுரவம் தடுக்கிறதே மனைவியுடன் இணக்கமில்லாதவர்களை கூறும்போது, நாட்டின் உச்சப் பதவியில் உள்ளவரே இந்த வரிசையில் ulla ஆர் என்று கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை