உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் கொள்கை. சகோதரர் விஜய் கட்சி துவங்கியது முதல், எங்கள் கொள்கையையே முழங்கி வருகிறார். அரசியல் எதிரி தி.மு.க., தான் என்று, அனைத்து பிரசார கூட்டங்களிலும் பேசி வருகிறார். தி.மு.க.,வை வீழ்த்த, ஒருமித்த கருத்துள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். அந்த வகையில், தே.ஜ., கூட்டணியில் விஜயும் இணைந்தால் சரியாக இருக்கும். டவுட் தனபாலு: சகோதரர் விஜய், உங்களுடன் வரணும்னு அழைப்பு விடுக்கிறீங்களே... அவரோ, முதல்வர் கனவில் இருக்காரு... நீங்களோ, 'ஆட்சியில் யாருக்கும் பங்கு தர மாட்டோம்'னு சொல்றீங்க... அவருக்கு, துணை முதல்வர் பதவியாவது தருவோம்னு உங்களால உத்தரவாதம் தர முடியுமா என்ற, 'டவுட்' வருதே! lll தமிழக துணை முதல்வர் உதயநிதி: தற்போது, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒன்றாகி விட்டன. விரைவில் பா.ஜ.,விடம் அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். ஒட்டுமொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள், 'கிளீன் போல்ட்' ஆக்குவர். டவுட் தனபாலு: ரெண்டு கட்சிகளுமே, ஆட்சியை பிடிக்கிறதுக்காக இலவச வாக்குறுதிகளை வாரி வீசுறீங்க... தேர்தலில் எந்த கட்சி ஜெயிச்சாலும், ஆட்சிக்கு வந்ததும் வரிகளை போட்டு தீட்டுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... அதனால, தமிழக மக்கள் தான், 'கிளீன் போல்ட்' ஆகப் போறாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை! lll கரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி: கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில், 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க.,வினர். அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும். டவுட் தனபாலு: கரூர் உயிர் பலிகள் நடந்ததுமே, நள்ளிரவே முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு ஓடோடி போய், மருத்துவமனையில் எல்லாருக்கும் ஆறுதல் சொன்னாரு... அமைச்சர்கள் மகேஷ், சுப்பிரமணியன் எல்லாம் அங்க போனாங்க... 'அவங்களுக்கும் சம்மன் கொடுத்து விசாரணைக்கு கூப்பிடுங்க'ன்னு கோர்த்து விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மார் 14, 2026 19:49

என்று தமிழக மக்கள் இலவசத்துக்கு அடிமையானங்களோ அன்றே கிளீன்போல்டு. வரிகட்டுவோர் பாடுதான் திண்டாட்டம்..


duruvasar
மார் 14, 2026 17:19

கோஈர்த்துவிடிகரோ என்ற டவுட்டு லிஸ்டில் எதற்காக உதயநிதி பெயரை விட்டோம் என்ற டவுட்டு கொஞ்சம் கூட வரவில்லையா ?


D.Ambujavalli
மார் 14, 2026 06:30

சொந்த கோட்டையிலேயே பிரம்மாண்டமாக கூட்டம் சேர்ந்தது மனப்பதற்றத்தையும், ‘என் ராஜ்ஜியத்தில் என் மதிப்பு இறங்கிவிடும்’ என்ற சுயநலமும், ஒருகால் … ஒருகால் என்ன, நிஜமாகவே கூட. பெரிய இடத்து ஆதரவும் சேர்ந்து நாடகம் அரங்கேறியிருக்கும் சும்மா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அதுதான் வாய்க்கு வாய் ஓதும் மந்திரம் உள்ளதே, ‘மடியில் கனமில்லை, சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ எதிர் கொள்ள வேண்டியதுதானே எதற்காக இந்தப் புலம்பல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை