உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: தற்போது, தி.மு.க.,வே, அ.தி.மு.க.,வின் பி டீமாக மாறி இருக்கிறது. அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தான். சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி பன்னீர்செல்வம் வரை பலரும் அங்கு உள்ளனர். அதை வைத்துத்தான் சொல்கிறேன்... தி.மு.க.,வே, அ.தி.மு.க.,வின் 'பி டீம்' தான்.! டவுட் தனபாலு: நீங்க சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை... தி.மு.க.,வில் இன்று செல்வாக்காகவும், வளமான துறைகளின் அமைச்சர் பதவிகளையும் வகிப்பவங்க, முன்னாள் அ.தி.மு.க.,வினர் என்பதில், 'டவுட்' இல்லை... அதே நேரம், இவங்களால, காலம் காலமாக, தி.மு.க.,வுக்கு உழைச்சவங்க கடும் அதிருப்தியில் இருக்காங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை! தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: காஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசி வருகிறார். நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, எந்த பிரச்னைக்கு, எந்த அதிகார வரம்பில், யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. டவுட் தனபாலு: காஸ் தட்டுப்பாடு விவகாரத்தில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, காஸ் சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதை தடுப்பது மாநில அரசின் பணிதானே... அதுல, தமிழக அரசு அலட்சியமாகவே செயல்படுது என்பதில், 'டவுட்'டே இல்லை!l தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்ற சம்பவங்களிலும், முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்களுக்கு மதுவும், கஞ்சாவும் காரணம் என கூறுகின்றனர். ஆனால், இந்த போதை பொருட்கள் எல்லாம், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் வந்தவை அல்ல! டவுட் தனபாலு: தமிழகத்தில் நடந்த பெரும்பாலான குற்ற சம்பவங்களின் பின்னணியை எடுத்து பார்த்தால், போதையில் தான் அந்த குற்றங்கள் நடந்தன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்... அதன்பிறகும், 'மதுவும், கஞ்சாவும் குற்றங்களுக்கு காரணமில்லை' என நீங்க சொல்றது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மார் 17, 2026 14:59

மதுவும் கஞ்சாவும் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தாலும் திமுக ஆட்சியில் தினமும் நடக்கும் சம்பவங்களுக்கு அப்பா தானே பொறுப்பேற்கணும்.


N K neru maama
மார் 17, 2026 08:18

எந்த அதிகார வரம்பில் யார் நடவடிக்கை எடுப்பது அப்படின்னு நேரு ஸ்டா‌லி‌ன் கிட்ட கேட்க திராணி இருக்கிறதா?


D.Ambujavalli
மார் 17, 2026 06:40

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய' கதையாக கட்சி மாறி வந்தவர்களை பதவி கொடுத்து சீராட்டிக்கொண்டே இருந்தால், தலைமுறை தலைமுறையாக கட்சிக்கு உழைக்கும் நாங்கள் இளிச்ச வாயர்களா? என்ற கோபம் இருக்கத்தானே செய்யும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை