உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

சினிமா இயக்குநரும், மதுரை மத்தி தொகுதி புதிய நீதி கட்சி வேட்பாளருமான சுந்தர்.சி: இந்த களம் எனக்கு ரொம்ப புதுசு. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு, இன்று பழனிசாமியால் வளர்க்கப்பட்டு கொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மதுரை மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. மதுரை மத்தி, தி.மு.க.,வின் பலம் வாய்ந்த தொகுதி; அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். எனவே, போட்டி கடினமாகத்தான் இருக்கும்; போட்டியை பார்த்து ஒதுங்கி போக முடியாது. * டவுட் தனபாலு: எதிராளியின் பலத்தை ஒப்புக்கொண்ட உங்க நேர்மையை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... அதே நேரம், மதுரை மண்ணின் மைந்தனான தியாகராஜனை எதிர்க்க, பணத்தை தண்ணீரா வாரியிறைக்க வேண்டியிருக்கும்... உங்களுக்கு சீட் கொடுத்த கல்வி தந்தை ஏ.சி.சண்முகம், கணிசமான அளவுக்கு ரூபாய் நோட்டுகளையும் தந்தாரா என்ற, 'டவுட்'டும் வருதே! தமிழக முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தான் ஒரு அறிவற்றவர் என்பதை, மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார். சசிகலா, பன்னீர்செல்வம் என பலருக்கு துரோகம் செய்து, முதுகில் குத்திய பழனிசாமி, இன்று, அ.தி.மு.க.,வை நான் உடைக்க நினைத்ததாக கூறுகிறார். அ.தி.மு.க.,வை அவர் தவறான பாதைக்கு கொண்டு செல்வதால், அக்கட்சியில் இருந்து விலகி, பலரும் தி.மு.க.,வில் இணைகின்றனர். * டவுட் தனபாலு: அது சரி... அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்தவங்களுக்கு, உடனே எம்.எல்.ஏ., சீட், தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்துட்டா, வளமான துறைகளின் அமைச்சர் பதவி என்று, ஆடி தள்ளுபடி மாதிரி நீங்க அதிரடி சலுகைகளை வாரி விடுறதாலயே, அங்கிருந்து பலரும் தாவி வர்றாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை! -------- தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி, பெண்களுக்கான அரசாகவும், பெண்களை உயர்த்தக்கூடிய அரசாகவும் இருக்கிறது. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எந்த வாக்குறுதியை தி.மு.க., தந்தாலும், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. * டவுட் தனபாலு: அப்படியா...? காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், மாதந்தோறும் மின் கட்டணம், பெட்ரோல் விலை குறைப்புன்னு கடந்த தேர்தல்களில் நீங்க தந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவே இல்லையே... அதே கதி, தற்போது தந்த வாக்குறுதிகளுக்கும் ஆகாது என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sundaran
ஏப் 05, 2026 18:59

ஒழுங்காக பேச முடியாதவர் அறிவில்லாதவன் என்கிறார்


duruvasar
ஏப் 05, 2026 11:45

ஏற்க்கனவே முகத்திரை கிழிந்து தொங்கியிருக்கிறது என்ற நிலையில் இப்படி மீண்டும் அளந்துவிட ஒரு பெண் என்ற அல்லவில்லவது கனிமொழிக்கு முகத்தில் வெட்கம் வந்திருக்கவேண்டாமா என்ற டவுட்டு வரவில்லையா ?


D.Ambujavalli
ஏப் 05, 2026 07:32

ஆயுசு பூரா போஸ்டரும், பசை வாலியும் தூக்கி, 200/ 300 க்கு வெயில் மழையில் வாடி உழைத்த எங்களுக்குப் பட்டை நாமம், இன்று வந்து ஒட்டிக்கொண்டவர்களுக்கு ராஜ போகும் என்ற ஒரவஞ்சனையால் தொண்டர்களின் கசப்பு எங்கு போய் முடியும் என்று உணர்வீர்களா ?


HoneyBee
ஏப் 05, 2026 14:56

இதை அடிமை கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும்


சமீபத்திய செய்தி