உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்க, முதல்வர் விஜய் நேரம் கேட்டதாகவும், பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை எனவும், அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். ஆனால், பழனிசாமியையோ, அவரது அலுவலகத்தையோ முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் விஜய், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், முதலில் பழனிசாமியை சந்தித்திருக்க வேண்டும். டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... 'முதல்லயே பழனிசாமியை விஜய் வந்து பார்த்திருந்தார் என்றால், அவரது அரசுக்கு நாங்களே ஆதரவு குடுத்திருப்போம்... எங்க கட்சியிலும் பிளவு வந்திருக்காது... அதை செய்ய விஜய் தவறிட்டார்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ல், ஆண்டுதோறும் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. கூட்டணி கட்சிகள் எல்லாம், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., பக்கம் சென்று விட்டன. இதனால், இந்த ஆண்டு கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை, தி.மு.க., தலைமை ரத்து செய்து விட்டது. டவுட் தனபாலு: அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி சந்திக்காத தோல்விகளா...? ஆனா, அது பற்றி கவலைப்படாமல், வழக்கம் போல தன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்துல பங்கேற்று, தானும் உற்சாகமாகி, கட்சியினரையும் உற்சாகப்படுத்துவார்... தோல்வியில் துவண்டு போகாமல் இருக்கும் கலையை, தன் தந்தையிடம் ஸ்டாலின் கத்துக்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது! பா.ம.க., தலைவர் அன்புமணி: மஹாராஷ்டிராவில், பயிர்க்கடனாக விவசாயிகள் வாங்கியிருந்த 36,585 கோடி ரூபாயை அம்மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, 2,044 கோடி ரூபாய் பயிர்க்கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது. அங்கு சாத்தியமாகும் கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? டவுட் தனபாலு: மஹாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்குது... அதனால, மத்திய பா.ஜ., அரசும் தாராளமா நிதியுதவி செய்யும்... நீங்க இப்ப, தே.ஜ., கூட்டணியில் தானே இருக்கீங்க... மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு நிதியுதவி வாங்கி குடுத்துட்டு, தமிழக அரசை கேள்வி கேட்டால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
ஜூன் 06, 2026 11:24

பஜை பாடல்கள் முடிவில் தயிர் வடை விநியோகம் செய்தாலே தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் எதற்கு தனியாக விழா நடத்தவேண்டும் என விட்டிருப்பார்கள் என்ற டவுட்டு ஏன் எழவில்லை.


duruvasar
ஜூன் 06, 2026 11:19

சும்மா ஒரு பேச்சுக்காக போகிற போக்கில் மதிய அரசு பிஜேபி ஆளுகின்ற மகாராஷ்டிரா அரசுக்கு பண உதவி கொடுத்திருக்கும் என்று எந்த ஒரு புரிதலுமில்லாமல் அரசியல் வாதிகளைப்போல் அடிச்சிவிட்டிருக்கிறோம் என்ற டவுட்டு உங்கள்சிபோன்றோருக்கு வருமா என்பது மிக பெரிய டவுட்டுதான்.


D.Ambujavalli
ஜூன் 06, 2026 07:05

தோல்விக்கு. காரணம். கண்டுபிடிக்க. 39. பேர். குழு. நியமித்து. விட்டு, அவர்கள் அறிக்கைக்காகக். காத்திருக்கும். அவருக்கு, மக்களை சந்திக்கவும், உற்சாகம். ஏற்படுத்தவும். எங்கே. நேரம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை