உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சூப்பராக உள்ளது. பாலியல் குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கின்றன. இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு மிக கடும் தண்டனை விதிக்க, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

டவுட் தனபாலு:

அது சரி... ஏதோ, விஜய் சினிமாவை முதல் நாள், முதல் காட்சி பார்த்துட்டு வெளியில வந்து பேட்டி அளிக்கிற ரசிகர் மாதிரி, 'ஆட்சி சூப்பர்'னு அடிச்சு விடுறீங்களே... தி.மு.க., கூட்டணியில் இருந்து நீங்களா வெளியேறாம, அவங்களா வெளியே அனுப்பிட்டா நல்லாயிருக்கும்னு நினைச்சு இப்படி எல்லாம் பேசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! ----

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:

பா.ஜ.,வில் இருந்து அண்ணாமலை விலகியதால் எந்த நஷ்டமும் இல்லை. உண்மையை சொல்ல போனால், விலகி செல்பவர்களுக்கு தான் நஷ்டம். பா.ஜ., என்பது ஒரு ஆலமரம். இங்கிருந்து வெளியே செல்பவர்களுக்கு தான் நஷ்டம் அதிகமே தவிர, கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும், யாராலும் எந்த காலத்திலும் வராது.

டவுட் தனபாலு:

தென் மாநிலங்களில் உங்க கட்சி, 'வீக்'கா தான் இருக்கு... ஏதோ, அண்ணாமலை வந்து தமிழகத்தில் உங்க கட்சியின் ஓட்டு வங்கியை உயர்த்தினாரு... இப்ப, அவரும் விலகிட்டதால, அடுத்து வர்ற தேர்தல்ல அந்த ஓட்டு வங்கியை அதிகரிச்சு காட்டினால் தான், உங்க கருத்து உண்மையாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை! ------

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

கூட்டணியால் தான், தி.மு.க., பலமாக இருந்தது. தற்போது, கூட்டணி எதுவும் இல்லாமல் தி.மு.க., தனித்து பலமில்லாமல் நிற்கிறது. ஆனால், நமக்கான கூட்டணி இன்னும் பலமாக இருக்கிறது. எனவே, த.வெ.க., அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாம் செயல்பட்டால், நிச்சயம் மக்கள் ஆதரவை பெற முடியும்.

டவுட் தனபாலு:

கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீங்க இப்படி பேசிய மறுநாளே, த.மா.கா., தலைவர் வாசன் சைக்கிளை தள்ளிட்டு, உங்க கூட்டணியில் இருந்து வெளியே போயிட்டாரு... பா.ம.க., தலைவர் அன்புமணி, தாமரை இலை தண்ணீர் மாதிரி தான் உங்களுடன் இருக்காரு... அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களில் ஜெயித்தால் மட்டுமே அ.தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூன் 16, 2026 20:17

வைகோ, துரை வைகோ பேச்சுக்களுக்கு இன்றயதினம் மதிப்பில்லை. அவைகளை மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தி மக்களை முகம் சுளிக்க வைக்க வேண்டாம்.


duruvasar
ஜூன் 16, 2026 13:52

திருப்பதி நாராயணன் அறிக்கை யாரோ கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டால் போல் இருக்கும் என்ற பழமொழி போல் இக்கு என்று சொல்லவேண்டும் என்று நமக்கு தெரியாமல் போச்சே என்ற டவுட்டு உங்களுக்கு வரவில்லையா


dm
ஜூன் 16, 2026 08:44

சட்டம் இயற்றமட்டும் மத்திய அரசு செய்யணுமா? இங்கே இருக்கற அரசு என்ன செய்யுது?


D.Ambujavalli
ஜூன் 16, 2026 07:16

பாவம் வைகோ, உ. சூரியனில் நின்ற. பாவத்திற்காக. 'நிற்கட்டுமா போகட்டுமா. '. என்று. தயங்கும். நிலையில். இருக்கிறார் இப்படி. எதையாவது. பேசி. ஸ்டாலினின். கோபத்துக்கு. ஆளாகியாவது. 'கிளம்பி. அந்தப்பக்கம். போய்விடலாமா. என்று. மனது. அடித்துக்கொள்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை