உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்., மூத்த தலைவர் சிதம்பரம்: 'இண்டி' கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க., சொல்லவில்லை. இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது வேறு; இண்டி கூட்டணியில் இருந்து விலகுவது என்பது வேறு. இண்டி கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகுவதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. டவுட் தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட்டு, அவங்க தயவில் ஜெயித்த உங்க கட்சியினர் ஆதரவில் தான் த.வெ.க., ஆட்சி அமைஞ்சிருக்குது... அதன் பிறகும், இண்டி கூட்டணியில் தான் தி.மு.க., நீடிக்கும்னு மூத்த அரசியல் தலைவரான நீங்களே எப்படி நம்புறீங்க என்ற, 'டவுட்'தான் வருது! பத்திரிகை செய்தி: சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின், அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எந்தவித சமரசமும் பேசாத நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவர்களிடம் போனில் பேசுகிறார். அப்போது, 'அ.தி.மு.க.,வில் நீடிக்க வேண்டும். கட்சி மாறும் எண்ணம் இருந்தால், தி.மு.க.,விற்கு வர வேண்டும்; உரிய மரியாதை அளிக்கப்படும்' என பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டவுட் தனபாலு: அது சரி... 54 வருஷங்களா, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எதிரும் புதிருமா அரசியல் பண்ணிட்டு இருந்த சூழல்ல, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வரவால, எல்லாமே தலைகீழா மாறிடுச்சே... 2031 சட்டசபை தேர்தல்ல, த.வெ.க.,வை எதிர்கொள்ள ஏதுவாக, இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துடுமோ என்ற, 'டவுட்'தான் வருது! பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில் அமித் ஷா பேசுகையில், 'மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை, மக்கள் துணையுடன் பா.ஜ., அகற்றி விட்டது. அடுத்த இலக்கு தமிழகம் தான். 2029 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே துவங்க வேண்டும்' என அறிவுறுத்தினார். டவுட் தனபாலு: தமிழகத்தில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க., கலகலத்து போயிருக்குது... எல்லா கூட்டணி கட்சிகளும் விலகி, தி.மு.க.,வும் தனிமரமா நிற்குது... இதனால, 2029 லோக்சபா தேர்தல்ல தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சேர்ந்து, ஆளுக்கு 20 தொகுதிகளில் போட்டியிடலாம்னு, அமித் ஷா வியூகம் வகுக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆகுயர்தான்
ஜூன் 18, 2026 11:56

ப சி ஒரு செல்லா காசு. தனக்கு பதவி வேண்டும். தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வேண்டுமாம். saiko வுடன் மல்லு கட்டுகிறார். தனக்கு உள்ள ஆளுமையை பயன்படுத்தி ரூபாய் அச்சடிக்கும் மெஷினை நல்ல விலைக்கு வித்து தருகிறேன் என உறுதி அளித்துள்ளார்...


duruvasar
ஜூன் 18, 2026 10:58

ப்ரபஞ்சத்திலிருக்கும் ஒற்றை அறிவு ஜீவி ஒன்றை சொல்லுகிறார் என்றல் அது அடுத்த சில யுகங்களில் நாடகப்போவதை கணித்துதான் சொல்லியிருக்க கூடும் என்ற டவுட்டு வரவில்லையா .


கண்ண
ஜூன் 18, 2026 09:31

ப சி க்கு ஏதும் தெரியாது, புரிந்து கொள்ளும் அளவும்்இல்லை என்பது நமக்குப் புரிகிறது


Raajan
ஜூன் 18, 2026 06:14

பசிக்கு பசி மயக்கத்தில் இருக்கிறார்


Raajan
ஜூன் 18, 2026 06:13

தமிழ்நாட்டில் பாஜக இன்னும் இருக்குதா? சொல்லவேயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை