உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க.,வை சேர்ந்த, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: நம்முடன் இருந்த சிலர் இன்று, 'சோபா' வந்தவுடன் நம்மை விட்டு விலகி விட்டனர். ஆனாலும், முஸ்லிம்களுக்கும், தி.மு.க.,வுக்குமான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதுாறுகளை பரப்பினாலும் முஸ்லிம்களுக்கும், பிற சிறுபான்மை மக்களுக்கும் தி.மு.க., என்றைக்கும் காவல் அரணாக இருக்கும். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடரில் இருந்து தமிழகத்தை தி.மு.க., நிச்சயம் மீட்கும். டவுட் தனபாலு: தமிழகத்தில் நீங்க ஆட்சியில் இருந்த காலம்தான் பேரிடர் காலம்னு, சமூக வலைதளங்கள்ல த.வெ.க., வினர் வறுத்தெடுத்துட்டு இருக்காங்க... தமிழகத்தை மீட்பது இருக்கட்டும்... தோல்வியில் துவண்டு கிடக்கும் உங்க கட்சியை எப்படி மீட்டெடுக்க போறீங்க என்ற, 'டவு ட்' வருதே! காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: எந்த குற்றமும் செய்யாத, பட்டியலினத்தை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனை களங்கப்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. பட்டியலினத்தவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகிப்பதா என்ற பொறாமையில், ஆர்.எஸ்.எஸ்., சதி செய்கிறது. டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின், தமிழக கவர்னரின் போக்கு மாறி விட்டது. டவுட் தனபாலு: 'பள்ளி மாணவியரின் கால்களை வருடிய விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு கவர்னரிடம் பா.ஜ.,வினர் மனு குடுத்திருக்காங்க... இதுல, பட்டியலினம் எங்கிருந்து வந்துச்சு...? பல வருடங்களா தி.மு.க., கூட்டணியில் இருந்த சகவாச தோஷம் தான் உங்களை இப்படி எல்லாம் பேச வைக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை! பா.ம.க., தலைவர் அன்புமணி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இதை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டவுட் தனபாலு: இந்த பிரச்னை சம்பந்தமா, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் பேசிய அனைத்து கட்சியினரும், அரசின் முடிவுகளுக்கு ஆதரவு தருவதா உத்தரவாதம் தந்துட்டாங்க... அனைத்து கட்சி கூட்டத்திலும் அதையே தான் சொல்ல போறாங்க... அதனால, சும்மா சும்மா கூடி பேசி நேரத்தை வீணடிக்காம, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

duruvasar
ஜூலை 09, 2026 20:43

போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளவேண்டிய ஒரு செயலை செய்தவருக்கு சாதி, மதம் என்ற பெயரில் முட்டுக்கொடுக்கும் ஒரு நபரை தேர்வு செய்த விருதுநகர் மக்கள் தான் வெட்கி தலைவர் குணியவேண்டும்


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2026 19:27

தோல்வியில் துவண்டு கிடக்கும் திமுக கட்சியை மீட்டெடுக்க எனக்கு உ.நிதி அனுபவம் போதாது. அந்த பொறுப்பை செந்தில் பாலாஜி அவன் தம்பி அசோக்குமாரிடம் அறிவாலயம் ஒப்படைத்துள்ளது.


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2026 19:19

மந்திரி என்ற பொறுப்பு கூட இல்லாமல் காங்கிரஸ் கருவாட்டுத்தலையன் எதற்காக பள்ளி மாணவியரின் கால்களை வருடிப்பார்த்தான்..?


D.Ambujavalli
ஜூலை 09, 2026 19:03

அந்தப்பெண் எதையோ. உணர்ந்து, - may be Aware. Of Bad Touch - காலை. இழுத்துக்கொள்வதிலிருந்தே. தெரியவில்லையா. அவரது. செயல். எதை. நோக்கிப். போகிறதென்று?


Suppan
ஜூலை 09, 2026 16:38

தாகூர் ஐயா பட்டியலினத்தவர் செய்யும் அடாத செயல்களுக்கு அதாங்க சிறுமிகளின் கால்களை வருடுவது ..எப்படி பொறுப்பாகும் ?


Suppan
ஜூலை 09, 2026 16:34

மாணிக்கம் சார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றால் சிறுமிகளின் கால்களை வருடலாமா ?


Suppan
ஜூலை 09, 2026 16:32

சாமி உதயநிதி நீங்க உட்கார நெகிழி நாற்காலி கொடுத்தீர்கள். அவிய கட்சி அலுவலகத்துக்கு சோபா குடுத்தாங்க .எது சரி? தேர்தலில் கிறிஸ்தவர்கள் உங்க கட்சியை தூக்கி கடாசி விட்டனர். அந்த "மத சார்பற்ற" முஸ்லீம் லீக் உங்க கூட்டணியை விட்டு ஓடிவிட்டதே. அப்புறம் எப்படி முஸ்லிம்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கட்சியை ஊத்தி மூடிவிட்டு சினிமாத்துறையில் கவனம் செலுத்தலாம்.


duruvasar
ஜூலை 09, 2026 15:07

சிறுமிகள் காலை வருடுவது குற்றமில்லை என காங்கிரெஸ் கட்சியில் இருபவன் மட்டும்தான் சொல்லமுடியும் என்ற டவுட்டு வரவில்லையா .


புதிய வீடியோ