உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு எதிரான அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில், தி.மு.க., - த.வெ.க., இருக்க வேண்டும் என்பதே என் பார்வை. இதை, தமிழக அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாது; நான் குழப்புவதாக சொல்வர். தமிழகத்தில் தி.மு.க.,வும், த.வெ.க.,வும் எதிரும், புதிருமாக இருக்கின்றன. ஆனாலும், தேசிய அளவில் மதவாத பா.ஜ.,வை எதிர்க்க, அவர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும். டவுட் தனபாலு: ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம்னு, நாடு முழுக்க பா.ஜ.,வுக்கு எதிராக அரசியல் செய்த கட்சிகள் இன்னைக்கு என்ன கதி ஆகியிருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்... அந்த வரிசையில் தமிழகத்திலும் தி.மு.க., - த.வெ.க.,வை காலி பண்ணிட்டு, வி.சி.க.,வை பெரிய அளவில் வளர்த்து முதல்வராகிடலாம்னு மாத்தி யோசிக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! பத்திரிகை செய்தி: காங்., கட்சியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளராக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபையில், காங்., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். டவுட் தனபாலு: பாவம்... குளுகுளு காஷ்மீர்ல நிம்மதியா இருந்தவரை, வெயில் வறுத்தெடுக்கும் தமிழகத்துக்கு பொறுப்பாளரா போட்டிருக்காங்களே... அதை விட, ஆயிரத்தெட்டு கோஷ்டிகள் இருக்கிற நம்ம ஊர் காங்.,கை, குலாம் அகமது மீர் எப்படி சமாளிக்க போகிறாரோ என்ற, 'டவுட்' வருதே! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மலை முழுங்கி மகாதேவன். தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது இதை பேசுவது தர்மம் கிடையாது என்பதால் அப்போது விமர்சிக்கவில்லை. சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காததால், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க நினைத்தேன். தேர்தலில் போட்டியிடா விட்டால், கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதால் போட்டியிட்டோம். டவுட் தனபாலு: அப்படி போட்டியிட்டும் இப்ப புண்ணியமில்லையே... தி.மு.க., சின்னத்தில் நின்று ஜெயித்த உங்க கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் உங்களுக்கு, 'பெப்பே' காட்டிட்டு போயிட்டாங்களே... அதனால, 'டவுட்'டே இல்லாம நீங்க தேர்தலையே புறக்கணிச்சிருக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Suppan
ஜூலை 11, 2026 15:45

கோப்பால்சாமி காரு வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் உங்கள் கட்சிதான் போட்டி போடுகிறது என்று தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்ளுமா? இல்லை வழக்கம் போல ஊரை ஏமாற்றுகிறீர்களா ?


கண்ணன்
ஜூலை 11, 2026 10:52

கட்டைப் பஞ்சாயத்து தலவரும் வடிவேலுவும் வேண்டுமானால் மீண்டும் கூட்டணி அமைத்து எ‌‌ன்ற வேண்டுமானாலும் செய்யலாம்


xyzabc
ஜூலை 11, 2026 09:49

. ஓசி சோறு கிடைத்தால் போதும்.


Sundaran
ஜூலை 11, 2026 07:28

தொல்லை வளவன் ஹிந்து இல்லை போலும். முஸ்லிம்களுக்கு ஓவர் ஆக முட்டு கொடுத்து தான் திருட்டு தி மு க காணாமல் போகிறது என்பது இன்னும் இந்த இரட்டை வேடதாரிக்கு புரிய வில்லை


புதிய வீடியோ