உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார்: 'முந்தைய அரசு கடன் வைத்து சென்றது' என, முதல்வர் விஜய் வசனம் பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மட்டும், அவரது அரசு கூடுதலாக, 20,281 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது; இந்த ஆண்டில் இன்னும், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. டவுட் தனபாலு: உங்க அ.தி.மு.க., அரசும், உங்களுக்கு பின் வந்த தி.மு.க., அரசும், மாநிலத்தின் கஜானாவை சுத்தமா, 'துடைச்சு' எடுத்துட்டு போயிட்டீங்க... மக்கள் நலத்திட்டங்களை தொடரணும்னா, கடன் வாங்கி தானே ஆகணும்... தமிழகம் இன்று கடன்கார மாநிலமா மாறியதற்கு பிள்ளையார் சுழி போட்டதே, ரெண்டு திராவிட கட்சிகளும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை! ---- தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தி.மு.க.,வை வழிநடத்தும் தகுதி தனக்கு உள்ளதா என்பதை, கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்தி, உதயநிதி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வை வழிநடத்த, துணை பொதுச்செயலர் கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என்பதை, தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும். டவுட் தனபாலு: என்னமோ, தி.மு.க.,வில் உட்கட்சி ஜனநாயகம் கொடிகட்டி பறப்பது மாதிரி, 'நிர்வாகிகளிடம் கருத்து கேட்கணும்'னு, சொல்றாரே... அந்த கட்சியில, கருணாநிதி குடும்பத்தினர் வச்சது தான் சட்டம்... அவங்க சொல்றது தான் வேதம்... அதை எதிர்த்து, யாரும் மூச்சு கூட விடமாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! ----- பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: 'நீட்' தேர்வு விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 'மாணவர்கள் நலன் தவிர, எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை' என்பதை, செயலால் காட்டியுள்ளார் பிரதமர் மோடி. எனவே, தேச ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும், தன் மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் துறந்துள்ளார். இதன் பெயர் தோல்வியல்ல; தார்மீகம். டவுட் தனபாலு: மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால, வேற வழியில்லாம மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா பண்ணியிருக்காரு... ஆனாலும், 'எங்களுக்கு தோல்வியில்லை'ன்னு ஜம்பமா பேசுறீங்களே... 'குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை' என்ற பழமொழிக்கு, சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜூலை 29, 2026 19:06

தமிழக அரசு கடனில் தத்தளிக்கிறது என்று தெரிந்தபின், தவெக தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்காமல் ஜெயித்து வந்திருந்தால் 1.75 கோடி மக்களும் உண்மையில் மாற்றத்தை வேண்டிதான் ஓட்டளித்துள்ளளனர் என்று நம்பலாம்.


D.Ambujavalli
ஜூலை 29, 2026 19:01

திமுகவிலிருந்து. யாராவது. தவெ க. அமைச்சர். வந்துதான். தீர்வு. காண. வேண்டும் என்று. வேண்டி. அழைத்தார்களா? அவர்கள் கட்சி, அவர்கள் பிரசினை இதில் மூக்கை. நீட்ட. இவர். யார்?


baala
ஜூலை 29, 2026 11:44

டவுட் தனபாலு கஜானனவுல பணம் அப்படியே இருக்குமா? திட்டங்களுக்கு பணம் எங்கே போவாங்க ஆளும் வர்க்கம். வருமானம் - செலவுதானே?


berlin
ஜூலை 29, 2026 09:27

Instead of taking loan collect the part funds from governments bodies then these PF looters will kept quiet


Lakshminarasimhan
ஜூலை 29, 2026 08:01

அப்போ இந்த விஜய் திமுக அதிமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காண்பித்த விதத்திலேயே இவர் ஆட்சியிலும் கடன் எகிறிடுத்தே இதை தடுக்க என்ன வழி எடுத்திருக்கார் மீண்டும் மீண்டும் பழைய ஆட்சியின் குறைகளையே சுட்டி காண்பித்து ஆட்சியை கரை தேத்திடலாம் என்று எண்ணுவது தவறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை