உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் பா.ம.க., தலைவர் அன்புமணி கேட்ட கேள்விக்கு, 'கர்நாடகா அணை கட்டுவதை தட்டிக்கேட்பதற்கு தமிழகத்திற்கு உரிமை கிடையாது' என, மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். எனவே, 'மத்திய அரசுக்கு ராஜ்யசபாவில் நீங்கள் தரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?' என அன்புமணியிடம் கேட்டால், 'காங்., தனியாக நிற்க வேண்டும்' என, அன்புமணி சொல்கிறார். டவுட் தனபாலு: அதானே... தி.மு.க., என்ற பலமான கூட்டணியில் இருந்து, சட்டசபை தேர்தலில், 28 இடங்களில் போட்டியிட்டும், ஐந்து இடங்களில் தானே காங்கிரசார் ஜெயிச்சிருக்காங்க... இதுல, அவங்களை தனியா வேற அன்புமணி போட்டியிடச் சொல்றாரே... அந்த விபரீத முடிவை எல்லாம் காங்., எடுக்குமா என்பது, 'டவுட்' தான்! பத்திரிகை செய்தி: தற்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, த.வெ.க.,வில் இணையுமாறு, அவரது மகனும், முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், தி.மு.க.,வில் நீடிக்கவே பன்னீர்செல்வம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. டவுட் தனபாலு: ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு போயிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும், இப்ப எங்க, என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னே தெரியலை... அவங்களை மாதிரி நம்மையும், 'சைலன்ட் மோடு'ல போட்டுட்டா, அரசியல் எதிர்காலம் என்னவாகும்னு பன்னீர்செல்வம் பயப்படுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது! பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி, சவுமியா எம்.எல்.ஏ., தலைமையில், வரும் அக்., 2 முதல், 'மது ஒழிப்பு இயக்கம்' தொடங்கப்படும். சில மாதங்களில், ஆந்திராவிலும் பா.ம.க., தொடங்கப்பட உள்ளது. அதற்காக, ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் விரைவில் சென்னை வருகின்றனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. டவுட் தனபாலு: நீங்க அங்கம் வகிக்கும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தான், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் இருக்குது... அதனால, ஆந்திராவில் உங்க கட்சிக்கு கிளை துவங்கி, தேர்தலில் ஜெயித்து, அந்த மாநில கூட்டணி அரசில் பங்கேற்க ஆசைப்படுறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Suppan
ஆக 01, 2026 15:50

அன்புமணி உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பைப்பற்றி கேட்டார். அந்த தீர்ப்பில் தமிழக உரிமையைப் பற்றிக்குறிப்பிடவில்லை. அதைத்தான் சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறினார். இதை மாணிக்கம் எப்படி திரிக்கிறார் பாருங்கள்


duruvasar
ஆக 01, 2026 10:25

ஆந்திராவில் செம்மரத்தை வெட்டுபவர்களில் 80 சதவிகிதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். அதனால் அன்புமணி இயற்க்கையாகவே ஆந்திர பக்கம் பார்வையை செலுத்திகிறார் என்ற டவுட்டு வரவில்லையா


Anantharaman Srinivasan
ஆக 01, 2026 19:08

அப்படியானால் ஆந்திராவில் செம்மரத்தை வெட்டுபவர்களில் பெரும்பாலோர் பாட்டாளி மக்கள் கட்சி தொழிலாளர்களா..?


கண்ணன்
ஆக 01, 2026 10:08

வடிவேலு உருவாகிறார்


முக்கிய வீடியோ