உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

கேரள மாநிலம், வயநாடு காங்., - எம்.பி., பிரியங்கா: டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் விளக்கம் அளிக்கும் வரை, பார்லிமென்ட் முடக்கம் தொடரும். அதை விடுத்து, மற்ற விவகாரங்கள் பற்றி அமித் ஷா பேசினால், நிச்சயமாக அமளியில் ஈடுபடுவோம். டவுட் தனபாலு: அது சரி... ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி, தடியடி வாங்கிய மாணவர்கள் கூட, துடைச்சு விட்டுட்டு அவங்க வேலைகளை பார்க்க போயிட்டாங்க... 'அவங்களுக்காக குரல் கொ டுக்கிறோம்' என்ற போர்வை யில், நீங்க தான் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! பத்திரிகை செய்தி: மாவட்ட வாரியாக இருந்த ரசிகர் மன்றங்களை, தொகுதி வாரியாக விரிவு படுத்தி, உறுப்பினர் சேர்க்கை நடத்தி, தன் பலத்தை எடை போட, நடிகர் தனுஷ் திட்டமிட்டு உ ள்ளார். அவரது செயல்பாடு, வரும் காலத்தில் த.வெ.க.,வுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது. எனவே, தனுஷின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உளவுத்துறையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில், கட்சி துவங்க திட்டமிட்ட விஜயையும் இப்படித்தான் கண்காணிச்சாங்க... விஜயின் பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட தடைகளை போட் டாங்க... இப்ப, ஆட்சிக்கு வந்திருக்கும் விஜயும், அதே பாணியில் செயல்படுறாரே... அதிகாரத்தில் அமர்ந்துட்டாலே, 'எதிரிகளே இருக்கக்கூடாது' என்ற எண்ணம் எல்லாருக்கும் வந்துடுமோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி: அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் பரிந்துரை செய்தவர்களையே, சட்ட சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். தகுதியான வேட்பாளர்களாக இருந்தால், அவர்கள் ஏன் தோல்வியடைந்தனர்? அனைத்து மாவட்டங் களிலும் ஒற்றுமையாக வேலை செய்திருந்தால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கும். டவுட் தனபாலு: என்ன தான் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், விஜய் அலைக்கு முன்னாடி எல்லாரும் காணாம போயிருப்பாங்க... முதல்வரா இருந்த ஸ்டாலினே, சென்னை கொளத்துார்ல தோற்றுப் போகலையா...? அதனால, நடந்து முடிஞ்சதை பேசுறதை விட்டுட்டு, 'அடுத்து என்ன செய்யலாம்'னு, யோசிச்சு முடிவு எடுத்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஆக 13, 2026 18:49

விஜய், கட்சி. ஆரம்பித்து. 2 ஆண்டுகளிலேயே. முதல்வர். ஆக. முடியுமென்றால், தனுஷ். மட்டும். எதில் குறைந்தவர். அடுத்து, சூர்யா, விக்ரம், என்று. கிளம்புவார்கள் ஆசை யாரை. விட்டது


Anantharaman Srinivasan
ஆக 13, 2026 17:31

பார்லிமென்ட் அமளி துமளியால் ஒத்திவைக்கப்படும் நாட்களில் MP களுக்கு எந்தவிதமான படியும் சலுகைககளும் கிடையாது என்று சட்டம் கொண்டு வந்தால் தான் தீர்வு கிடைக்கும். இந்திய அரசியல் சாசனத்தின் தலையெழுத்து அதையும் Parliament ல் M P க்கள் சட்டமாக இயற்ற வேண்டும். அது முடியாது நடக்காத காரணத்தால் தான் கூத்தடிக்கிறார்கள். நம்மில் ஒருவர் "மக்கள் வரிப்பபணம்" வீணடிக்கப்படுகிறதென்று பொதுநல வழக்கு தொடுத்தால் என்ன..? ஜனாதிபதி மூலமாக Special law இயற்ற முடியுமா..? என்று தெரியவில்லை.


A viswanathan
ஆக 13, 2026 16:07

இவரை எம் பி யாக தேர்ந்தெடுத்த வயநாடு மக்களுக்கு என்ன செய்திருக்கிறார். மக்களே கட்சியையோ மதத்தையோ பார்த்து ஓட்டளித்தால் இது தான் நடக்கும். நாட்டிற்காக மக்களுக்குகாக உழைப்பவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுங்கள் வருங்காலத்தில்.


ellar
ஆக 13, 2026 10:35

புதிய பிரபல காங்கிரஸ் தலைவர் ஆன பிரியங்கா அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம் முள்ளிவாய்க்கால் ஐம்பதாயிரம் பேர் அடித்துக் கொல்லப்பட்டதை பற்றியும் 1947 இல் நாட்டை பிரிக்கும் பொழுது சில லட்சம் பேர் கொல்லப்பட்டதையும் கொஞ்சம் உலகத்துக்கு புரிய வைக்க நமது பார்லிமென்டையும் ஐநா சபையையும் சிறிது நேரம் அமெரிக்க பார்லிமெண்ட்டையும் முடக்கி வையுங்கள் அம்மா


சுலைமான் சேட், பரங்கிப்பேட்டை
ஆக 13, 2026 08:51

அப்டியே டெக்கான் ஹெரால்ட், உங்க புருஷன் செய்த ஊழல் கொள்ளை அடித்த சொத்து, bofors ஊழல் ஒட்டாவா quotrocchi தொடர்பான அனைத்தையும் விவாதிக்க வேண்டும். நீங்க ரெடி யா? நாறிடும். ஜாக்கிரதை


Kalyanaraman Subramaniam
ஆக 13, 2026 08:05

அறிவுஜீவிகள் நிறைந்த தமிழகத்தின் மாறாத அடையாளம், மற்ற எங்கிருந்தும், எந்தத் துறைகளிலிருந்தும், தலைவர்களைத் தேடாமல், சினிமாத் துறையில் மட்டுமே தேடுவது!!


ராஜா
ஆக 13, 2026 06:21

சொந்த தொகுதியில் மக்கள் நிலச்சரிவில் சிக்கி செத்துக்கொண்டு இருக்க, ஜந்தர் மந்தரில் சுற்றியது ஒரு பந்தர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை