உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: மதுராந்தகம் தொகுதியில், மா.கம்யூ., சார்பில் தீண்டாமை ஒழிப்பு இயக்க பொதுச்செயலர் சுகந்தி போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில், இந்திய கம்யூ., தாராபுரம் தாலுகா செயலர் லட்சுமணன் போட்டியிடுகிறார். நாங்கள் தனித்து போட்டியிட்டாலும், த.வெ.க., அரசுக்கு எங்கள் ஆதரவு தொடர்கிறது. டவுட் தனபாலு: இடைத்தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சிகள் எல்லாம், த.வெ.க., அரசை தாறுமாறா விமர்சித்து தான் ஓட்டு கேட்பாங்க... நீங்க என்ன சொல்லி ஓட்டு கேட்பீங்க என்ற, 'டவுட்' வருதே... அதேநேரம், ஐந்து முனை போட்டியில் உங்க கட்சி வேட்பாளர்கள், 'டிபாசிட்'டையாவது திரும்ப வாங்குவாங்களா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது! முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான வேலு: சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து, சபையில் எதுவும் பேசக்கூடாது என்பது விதி. மேலும், சபையில் இருப்போர் குறித்து புகார் கூற வேண்டுமெனில், முன்கூட்டியே சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கும் தகவல் அளித்து விட்டு தான் பேச வேண்டும். ஆனால், இந்த விதிகளை எல்லாம் மதிக்காமல், அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், அவர் மீது சபாநாயகரிடம் சட்டசபை உரிமை மீறல் புகார் அளித்துள்ளோம். டவுட் தனபாலு: தமிழகத்தில் நீங்களும், பல வருஷங்களா ஆளுங்கட்சியா இருந்திருக்கீங்க... சட்டசபை உரிமை மீறல் சம்பந்தமான புகார்ல, எந்த எம்.எல்.ஏ., மீதாவது நடவடிக்கை எடுத்திருக்கீங்களா...? இந்த ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனாலும், வீண் விளம்பரத்துக்காக இந்த மாதிரி புகார் தர்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், புதிதாக தொழிற்சாலைகள் எதையும் அமைக்க முடியவில்லை. ஆனால் ஆந்திராவில், 'எந்த வளத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளனர். அதனால், அந்த மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன. டவுட் தனபாலு: 'ஆந்திராவில் விவசாயமே நடக்கலை' என்பது போல பேசுறீங்களே... காவிரி டெல்டா தவிர்த்து, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு சலுகைகள் வழங்கினால், தொழில் வளமும் பெருகும்; நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
செப் 19, 2026 17:07

இதென்ன. குதர்க்கம்? தங்கள். கட்சி. தலைவர்கள், கட்சியை . தோற்றுவித்தவர்களின் சேவை, அவர்கள். பதவிக்காலத்தில். செய்த. நன்மை, தீமைகள். எல்லாம். சட்டமன்ற. நிகழ்வுகளை. பார்க்கும். இந்தத். தலைமுறைக்குத். தெரிய. வேண்டாமா? இன்றைய. தலைவர்களை. கூட்டத்தில். விமர்சித்ததை. தானே. ஆட்சேபிக்கிறார்கள். /


கண்ணன்
செப் 19, 2026 11:39

போட்டியில்்நிற்பவர்கள்்தமது ஓட்டுக்களைப் போட்டுக் கொண்டால் ஆறுக்கு ஒரு ஓட்டு கிடைக்கும் குழப்பவாதிகள்


Lakshminarasimhan
செப் 19, 2026 07:39

இந்த கம்யூனிஸ்ட் ரெட்டை வேஷத்தை மக்கள் புறக்கணிக்கணும் அப்போ தான் இவர்களுக்கு புத்தி வரும்


Subramanian Marappan
செப் 19, 2026 06:26

அப்படி என்றால் எப்படி பெரியார் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் இறந்து போனவர்கள் பேரை உபயோகப்படுத்தலாம். இதை வேலு மறந்து விட்டாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை