உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: வரும் அக்., 11ம் தேதி, மதுரை தமிழ் சங்கத்தின் சார்பில், முதல்வர் விஜய் வாழ்க்கை வரலாற்று நுாலை வெளியிடுகிறேன். த.வெ.க., சிறப்பாக ஆட்சி செய்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க., தான் வெற்றி பெறும். தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு, த.வெ.க., ஆட்சி தான் நடக்கும். டவுட் தனபாலு: அடடா... த.வெ.க.,வினர் கூட, 'அடுத்த 20 வருஷங்களுக்கு த.வெ.க., ஆட்சி'ன்னு அடக்கி தான் வாசிக்கிறாங்க... நீங்களோ, '100 வருஷங்களுக்கு த.வெ.க., ஆட்சி'ன்னு அடிச்சு விடுறீங்களே... விஜய் வாழ்க்கை வரலாற்று நுாலை வெளியிட, உங்களை சரியாத் தான் தேர்வு செஞ்சிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ்: உலகின் பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டின் பிரதமர்கள் பல முறை மாறி உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில், இங்கிலாந்தில் எட்டு முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஆனால், இந்தியாவில் பிரதமராக மோடி நிலையாக உள்ளார். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இந்த 12 வருஷங்கள்ல அமெரிக்காவில் கூட ஒபாமா, ஜோ பைடன், டிரம்ப்னு மூணு அதிபர்கள் மாறிட்டாங்களே... அது இருக்கட்டும்... 'மோடி அசைக்க முடியாத தலைவரா இருக்கார்'னு நீங்க பெருமைப்படுறீங்களா அல்லது, 'கட்சியில் மத்தவங்களுக்கு வழி விடாம, அவரே பதவியை ஆக்கிரமிச்சிட்டு இருக்கார்'னு ஆதங்கப்படுறீங்களான்னு ஏகப்பட்ட, 'டவுட்'கள் வருதே! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தொழில் முதலீடுகளை ஈர்க்க, லண்டன் சென்று வந்த முதல்வர் விஜய், அந்த துறையின் அமைச்சர் மற்றும் செயலரை அழைத்து செல்லாமல், சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்து சென்றுள்ளார். 'தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா, இன்பச் சுற்றுலா சென்றாரா' என மக்கள் கேட்கின்றனர். டவுட் தனபாலு: முதல்வர் விஜய் ஏற்கனவே நடிகரா இருந்தப்ப, படப்பிடிப்புகளுக்காக பல வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தவர் தான்... அதனால, அரசு பணத்தில் தான் சுற்றுலா போகணும்னு அவருக்கு அவசியம் இல்லை... ஆனா, நீங்க முதல்வரா இருந்தப்ப, 'கோட், சூட்'டெல்லாம் மாட்டிக்கிட்டு, பல வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போனீங்களே... அதுல, இப்ப எத்தனை செயல்பாட்டில் இருக்கு என்ற புள்ளி விபரங்கள் தங்களிடம் இருக்குமா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
செப் 21, 2026 16:56

கருணாநிதி. குடும்பம். போல், அவர்களுக்கும் மேலாக. விஜய்யின். எள்ளுப்பேரன். , வரை. தமிழகத்தை. ஆளப்போகிறார்களா? மதுரை ஆதீனம். ஆளும். கட்சிகளுக்கு, தாளம். தட்டுவதில்தான். மிக. கருத்தாக. இருக்கிறார்


Anantharaman Srinivasan
செப் 21, 2026 13:03

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜால்ரா அடித்து புகழ்ந்து பாடுவதே வேலையாகி விட்டது..


Kalyanaraman Subramaniam
செப் 21, 2026 07:34

டவுட் தனபாலோட ஜால்ரா சத்தம் எங்க ஊர் வரைக்கும் கேட்குது! விசை வெளிநாடு பாத்திருக்காரா இல்லியா அப்படிங்கறது இங்கே கேள்வி இல்லை... போன 7 நாளிலே என்ன செஞ்சாரு அப்படிங்கறதுதான் டவுட்.... அவங்க கட்சிக்காரங்களே அடக்கி வாசிக்கிறாங்க... டவுட் என்ன வரிஞ்சுகட்டிகிட்டு வர்றாரு?


Suppan
செப் 21, 2026 16:46

அவரு குடும்பப் பஞ்சாயத்துக்காக போயிருந்தார்னு சொல்றாங்களே