ஹிந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு: மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை. அதனால் தான்,அரசை கண்டித்து அடிக்கடி அறிக்கை வெளியிடுகிறார்.டவுட் தனபாலு: எதிர்க்கட்சி தலைவருக்கான பணியே, நீங்கசெய்ற தவறுகளை சுட்டிக்காட்டுறதுதான்... அதை திருத்திக்காம,'அவருக்கு வேலையில்லை'ன்னுஇப்படி ஏகடியம் பேசிட்டு இருந்தீங்க என்றால், அடுத்த தேர்தலில், வேலையில்லாதவங்கபட்டியலில் நீங்க இடம் பிடிச்சிடுவீங்க என்பதில், 'டவுட்'டேஇல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி:விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக லஞ்சமாக பெறப்பட்ட, 11.70 லட்சம்ரூபாயுடன், ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக,அவரை நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்து, அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனைவழங்குவதற்கு பதிலாக, வெகுமதிவழங்குவது கண்டிக்கத்தக்கது.டவுட் தனபாலு: அது சரி... 'சின்ன ஊரான ஊட்டியிலயே, லட்சங்கள்ல வாங்கியவரை, பெரியஊரான நெல்லைக்கு அனுப்புனாகோடிகள்ல வாங்குவார்... அதன் வாயிலா நமக்கான பங்கும் பெருசா வரும்'னு நினைச்சு, அவரது துறையின் மேலிடம்,இந்த வெகுமதியை அவருக்கு குடுத்திருக்குமோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக பொதுப்பணித் துறைஅமைச்சர் எ.வ.வேலு: தி.மு.க.,வில்ஐந்தாவது தலைமுறையாக உதயநிதி பணியாற்றி வருகிறார்.உதயநிதியை சிறு வயதில் இருந்து பார்க்கிறேன்... ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு, சுயமரியாதையை அவரிடம் காண்கிறேன். அண்ணாதுரையின்இருமொழி கொள்கையை ஏற்று,தாய்மொழி தமிழிலும்,ஆங்கிலத்திலும் பேசக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.டவுட் தனபாலு: நீங்க சொல்ற இந்த தகுதிகள், தி.மு.க.,வில் பல லட்சம் பேரிடம் இருக்கு... அவ்வளவு ஏன்...? உங்க கட்சியின்பொதுச்செயலரான துரைமுருகனிடம் இந்த எல்லா தகுதிகளும் ஏராளமா இருக்கு... ஆனாலும், அவரால தலைமை பதவிக்கு வர முடியுமா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் பதில் இருக்கா?