உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: 'அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி'என்பதை கோஷமாக வைத்து வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் செயல்பட்டார். ஆனால், அவர் இப்போது முதல்வர்ஸ்டாலின் முன், 'அடங்கி போ' என்ற கொள்கைக்கு மாறி விட்டார். அந்த கொள்கையை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்ததால், அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்.டவுட் தனபாலு: இன்றைய சூழலில், தமிழகத்தில் தி.மு.க., அணி தான் பலமா இருக்குது... அவங்களுக்கு அடங்க மறுத்து, அவசரப்பட்டு வெளியேறினா அரசியலில் லாபமில்லை என்பதை உணர்ந்து தான், திருமாவளவன் இப்போதைக்கு அடங்கி போயிருக்கார்... அந்த வகையில் அவர் சிறந்த ராஜதந்திரி என்பதில், 'டவுட்'டே இல்லை!திரிணமுல் காங்., தலைவரும்,மேற்கு வங்க முதல்வருமான மம்தாபானர்ஜி: 'இண்டியா கூட்டணிக்குதலைமை ஏற்க வேண்டும்' என,என் மீது மரியாதை வைத்து கூறிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் நலன் விரும்பி நான். உங்கள் கட்சி சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். இண்டியாகூட்டணியும் நன்றாக செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம்.டவுட் தனபாலு: அது சரி... 'இண்டியா' கூட்டணி, காங்கிரஸ்கட்டுப்பாட்டில் தான் செயல்படுது... சுதந்திரமாகவும், அதிரடியாகவும் முடிவெடுக்கிற உங்களை, இண்டியா கூட்டணிக்குதலைமையேற்க காங்.,அனுமதிக்குமா என்பது, 'டவுட்' தான்!பா.ம.க., தலைவர் அன்புமணி:தமிழக கிராமப்புறங்களில் உள்ளதுவக்கப் பள்ளிகளில், துாய்மைபணியாளர்களுக்கு மாதம் 1,000ரூபாய், நடுநிலைப் பள்ளிகளில்1,500, உயர்நிலைப் பள்ளிகளில்2,250, மேல்நிலைப் பள்ளிகளில்3,000 ரூபாய் என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த தொகையை கூட ஓராண்டாகவழங்காமல், தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. டவுட் தனபாலு: சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள்ல துாய்மை பணிகளை, தனியாரிடம்ஒப்படைச்ச மாதிரி, அரசு பள்ளி துாய்மை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிட்டு, அங்கயும் தனியாரை புகுத்தவே இப்படி செய்றாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
டிச 14, 2024 05:56

ஏழை, தூய்மைப் பணியார்களின் சம்பளத்தைக் கொசுக்கக்கூட நிதி இல்லை என்று மூக்கால் அழுவார்கள் ஆனால் மூலைக்கு மூலை கருணாநிதி சிலை வைக்க மட்டும் நிதி கொட்டிக் கிடைக்கிறதா?


கிஜன்
டிச 14, 2024 03:33

சுயநலத்தின் மறுபெயர் ராஜதந்திரமா ? ... ஒடுக்கப்பட்ட மக்கள் .... குடிக்கும் நீரில் ... கழிவுகளை கலந்த பாவிகளை கூட எதிர்க்கும் திராணியற்றவர் .... இவர் போன்றவர்களையெல்லாம் ஏன் ...தந்திரி ...முந்திரி என்று கொண்டாடுகிறீர்கள் ...


சமீபத்திய செய்தி