உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம்' என சுற்றி சுற்றி வந்த மோடிக்கு, 250 தொகுதிகள்தான் கிடைத்தன. எதிர்காலத்தில்இந்த 250 கூட மோடிக்கு வராது. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும். நான் இருக்கும் வரை தி.மு.க., ஆட்சியை அகற்ற விடமாட்டேன். டவுட் தனபாலு: 'தனிப்பட்டதி.மு.க.,வால, சட்டசபை தேர்தல்ல ஜெயிக்க முடியாது... இண்டியா கூட்டணி தான் வெல்லும்' என்றும், 'நான் கூட்டணியில் இருந்து போயிட்டால், தி.மு.க.,வால ஜெயிக்க முடியாது' என்பதையும்தான், இப்படி சுத்திவளைச்சு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான்வருது!*********தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை: மத்திய அமைச்சர்களை, தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர்.ஆனால், கீறல் விழுந்த ரிகார்டு போல, 'மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை' என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். எந்த திட்டத்திற்கு நிதி தரப்பட்டதோ, அந்த திட்டத்திற்குசெலவிட வேண்டும். மழைநீர்கால்வாய்களுக்காக 4,000 கோடிரூபாய் ஒதுக்கியதை என்ன செய்தனர் என்று தெரியவில்லை.செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக, மத்தியகணக்கு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.டவுட் தனபாலு: மழைநீர்கால்வாய் கட்டுங்கன்னு நிதி கொடுத்தால், அதை செய்யாம அசால்டா இருந்துட்டு, அப்புறம்வெள்ள நிவாரணம் குடுங்கன்னுகேட்டா எப்படி தருவாங்க...? வந்த நிதியை வம்படியா திருப்பிஅனுப்பிட்டு, வராத நிதிக்கு பழி போடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!*********பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:வரும் 2026ல், தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வினர் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும்.நினைத்ததை சாதிக்க பா.ம.க.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.டவுட் தனபாலு: அது சரி... மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி, பேரனுக்கு இளைஞர் அணிதலைவர் பதவின்னு குடும்பத்துக்கே பதவிகளை பங்குபோட்டுக்குறீங்க... உழைக்க மட்டும் தொண்டர்களை தேடுவதுசரியா என்ற, 'டவுட்' வருதே!*********


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
ஜன 03, 2025 23:24

தொண்டர்கள் கடுமையா உழைக்கணும். தைலாபுர குடும்பம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அனுபவிக்கணும். கோபாலபுர திராவிட குடும்பத்துக்கு அடுத்து வன்னியர் போர்வையில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் கட்சி.


M Ramachandran
ஜன 03, 2025 11:05

ஊர் சர்ச்சில் போயி சேவை செய்ய வேண்டியது தான்.


Yes your honor
ஜன 03, 2025 11:05

4,000 கோடியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவது தான் திமுகவின் விஞ்ஞான மூளை. 4,000 கோடியை திட்டமிட்டவாறு வேலைகளை செய்து முடித்திருந்தால், மிச்சம் சொச்சம் தான் கிடைத்திருக்கும். அப்படியே விட்டுவிட்டு, மழையால் பாதிப்படைந்தவுடன் ஒரு பட்ஜெட் போட்டு 23,000 கோடி கேட்டால்? 4,000 பெரிதா 23,000 பெரிதா. மேலும், பணிகளை சேய்தோம் என்றால் பல்வேறு கணக்குகளைக் காட்ட வேண்டிவரும். தேவையில்லாத சிக்கல். கணக்கு காட்டுவது என்றால் நமக்கு கனவிலும் ஆகாது. மழை முடிந்தபிறகு போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி, கனிமொழி, TR பாலு எல்லாம் டெல்லி சென்று தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐயா சாமீ என்றால் ஏதாவது கருணை கிடைக்கும். பொய்கணக்கும் எளிதாக எழுதமுடியும். நாங்கள் எல்லாம் யார், கல்லை கட்டி கடலில் போட்டாலும் அதிலும் ஏதாவது ஊழல் செய்து கட்டுமரமாக வரக்கூடிய வல்லவர்கள்.


கிஜன்
ஜன 03, 2025 09:50

வெ.கொ. என்று இவருக்கு போட்டியாக அழைக்கப்பட்ட வெற்றிகொண்டான் ...சிரித்துக்கொண்டிருப்பார் ...


கண்ணன்
ஜன 03, 2025 09:49

வை கோ என்ன படித்தார் என்று தெரியவில்லை ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்பது புரிகிறது. 400 இடங்களுக்கு மேல் என்று கூறுய பா ஜ தனது கூட்ணணிக் கட்சிகளைச் சேர்த்துத்தான் என்பது கூட இவருக்கு இன்னும் புரியவில்லை. நல்லவேளை மக்கள் இவரை ஆரம்பத்தில் இருந்து புறக்கணித்து வந்துள்ளனர்


Dharmavaan
ஜன 03, 2025 15:52

மடையன் பேச்சுக்கு என்ன மரியாதை தேவை


Anantharaman Srinivasan
ஜன 03, 2025 23:30

வைகோ என்ன படித்தார் என்று ......ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்பது புரிகிறது. திமுக வில் யாருமே சரியா படிக்கவில்லை என்பது எப்போ புரியும்..?


தா நா பற்றாளர், kk nagar
ஜன 03, 2025 07:45

ஆமா யாரு அவரு...?


Shekar
ஜன 03, 2025 08:36

அட அவர உங்களுக்கு தெரியலையா? அவர்தாங்க வைகோ என்று அழைக்கப்படும் வை. கோபால்சாமி


Venkat
ஜன 03, 2025 11:27

தேர்தல்ல சீட் வேணுமில்ல இப்பொவே துண்டு போடுறார்..


D.Ambujavalli
ஜன 03, 2025 05:26

எல்லாக் கட்சிகளும் வாரிசு அரசியல் செய்யும்போது இவர் மட்டும் ஏமாளியா? கோபுரத்தின் தானே தாங்குகிறேன் எனினுமாம் பொம்மை வைகோ பேச்சு அப்படித்தான் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை