வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மெல்ல மெல்லக். கூட்டணிக்கு காட்சிகளே விமரிசிக்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் சமயம் அவர்களைத் தன்னைக்கட்டி வைக்க ‘பெட்டிகள்’ கைமாறுமோ, சீட்களின் எண்ணிக்கை கூடுமோ பார்க்க வேண்டும்
சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார்: போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதில்லை. தினமும் ௧ கோடி கி.மீ., இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தற்போது, 80 லட்சம் கி.மீ., மட்டுமே இயக்கப்படுகின்றன. 2017ல், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, 18,200 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., ஆட்சியை விட, தி.மு.க., ஆட்சி சிறப்பா செயல்படுது'ன்னு, முதல்வரும், அமைச்சர்களும் பெருமை அடிச்சுக்குறாங்களே... இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சொன்னால் கூட, அரசியலுக்காக பேசுறாங்கன்னு எடுத்துக்கலாம்... ஆனா, ஆளும் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான நீங்களே சொல்றதால, 'டவுட்' இல்லாம ஏத்துக்கதான் வேணும்!தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: அமைச்சர் பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு போகாதவர். அவருடைய வழக்கு விசாரணைக்கு மட்டுமே அங்கு செல்வார். அதேபோல், அமைச்சர் ரகுபதியும் அதிகமாக கோர்ட்டுக்கு போகாதவர். இந்த விஷயத்தில் அவர்களை காட்டிலும் நான், 'ஜீரோ' தான். டவுட் தனபாலு: 'பொன்முடி, ரகுபதி எல்லாம் சொத்து குவிப்பு வழக்குகள்ல சிக்கி அடிக்கடி கோர்ட்டுக்கு போனாங்க, போயிட்டு இருக்காங்க... நான் இதுவரைக்கும் எந்த வழக்குலயும் சிக்கலப்பா'ன்னு நாசுக்கா குத்தி காட்டுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மதவாத சக்திகளையும், சனாதனத்தையும் எதிர்த்தே அரசியல் செய்ய போவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதுதான் அவரது அரசியல் நிலைப்பாடு என்றால், அவர் இருக்க வேண்டியது, 'இண்டியா' கூட்டணி; அந்த வகையில், அவர் இந்தக் கூட்டணிக்கு தான் வர வேண்டும்.டவுட் தனபாலு: அதே விஜய், 'திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர்' என, தி.மு.க.,வையும் சேர்த்து வாரியிருந்தாரே... உங்க வசதிக்கு ஏற்ப, அதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
மெல்ல மெல்லக். கூட்டணிக்கு காட்சிகளே விமரிசிக்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் சமயம் அவர்களைத் தன்னைக்கட்டி வைக்க ‘பெட்டிகள்’ கைமாறுமோ, சீட்களின் எண்ணிக்கை கூடுமோ பார்க்க வேண்டும்