உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்: சுயலாபத்திற்காக மட்டுமே, ஈ.வெ.ரா., பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியை காக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பை தான் மத்திய அரசு நடத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, ஜாதிவாரி ஆய்வை மாநில அரசே நடத்தலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர் என்பதை மக்கள் நன்கு அறிவர். டவுட் தனபாலு: அவங்க நேர்கோட்டில் பயணிக்கிறாங்களா, இல்லையான்னு தெரியலை... ஆனா, திருமாவளவன், ராமதாஸ், சீமான்னு பல கட்சிகளின் கொள்கைகளையும் கலந்து கட்டி அடிச்சு, நீங்க எந்த கோட்டில் பயணிக்கிறீங்க என்ற, 'டவுட்'டுக்கு தான் யாருக்கும் விடை தெரியலை!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், மாலை 5:00 மணிக்கு மேல், மருத்துவர்கள் இல்லாதகாரணத்தால், அங்கு வரும்நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக, இரவு அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை, மருத்துவர்கள் பற்றாக்குறை எனக் கூறி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், பல நோயாளிகளின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே, மருத்துவர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.டவுட் தனபாலு: 'அவசரத்துக்கு அரசு மருத்துவமனைகளுக்கு போனா உயிருக்கு உத்தரவாதம் இல்லை'ன்னு சொல்றீங்க... தனியார் மருத்துவமனைகள் நல்லாயிருக்கட்டும்னு தான், டாக்டர் பணியிடங்களை அரசு நிரப்புவதில் அலட்சியம் காட்டுறாங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'ஆட்சிக்கு வந்ததும், விவசாய கடன் தள்ளுபடிக்கு முதல் கையெழுத்து போடப்படும்' என, ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று வரை பயிர் கடனை ரத்து செய்யாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில், தி.மு.க., அடித்திருக்கிறது.டவுட் தனபாலு: அடுத்த வருஷம் தேர்தல் வருதே... அதுக்கு முன்னோட்டமா, பயிர் கடன்களை தள்ளுபடி பண்ற அறிவிப்பை வெளியிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bharathi
பிப் 08, 2025 23:56

விக் தலை முதல்வர் மருமகன் எழுதி தந்ததை படிக்கிறார். இந்த ஆளு லயோலா காலேஜ் எழுதி கொடுத்ததை படிக்கிறார்.


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 14:04

விவசாய கடன் தள்ளுபடி செய்ய நினைத்து கையெழுத்து போடும் போது மட்டும் பேனா மை தீர்ந்து போய் மக்கர் செய்கிறது. மெரினா கடற்ரையில் கலைஞர் பேனாவை வைத்தவுடன் அந்த பேனாவால் முதல் கையெழுத்து போட்டு விடுவார்.


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 13:58

எல்லா அரசியல்வாதிகளும் சுயலாபத்திற்காக மட்டுமே, ஈ.வெ.ரா., பற்றி பெருமை பேசி கட்சி வளர்க்கின்றனர் என்பதே உண்மை.


Suppan
பிப் 08, 2025 15:47

சீமான் ராம் சாமியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியதால் அநேகமாக எல்லா கட்சிகளுமே ராம் சாமியின் மட்டமான கருத்துக்களை குழி தோண்டி புதைத்து விடுவர். ராம் சாமியின் சமூகநீதி இடைசாதிகளுக்கு மட்டும்தான். இந்த மாதிரி ஆசாமியை எப்படித்தான் தூக்கிப்பிடிக்கிறார்களோ? அதையும் நம்புவதற்கும் தற்குறிகள் உள்ளனர்.


Rajan A
பிப் 08, 2025 07:21

இன்றைய உளறல்கள்னு எழுதி கொடுத்திருப்பார்கள். இந்த மாதிரி படிப்பறிவில்லாத சினிமாக்காரர்கள் நாட்டுக்கு என்ன நல்லது செய்ய போகிறார்கள்? இதுக்கு தீமுகாவிற்கே வோட்டு போட்டு விடுவார்கள். மாதம் 1000மாவது கிடைக்கும். எப்படியோ தமிழகம் ஐசியுவிலேயே இருக்க வேண்டியதுதான்


D.Ambujavalli
பிப் 08, 2025 06:29

போன தேர்தலின் manifesto வை அப்படியே வருஷத்தை மட்டும் மாற்றி பிரசாரம் செய்தால். புதிதாக ‘கற்பனை’ செய்யும் நேரம் மிச்சமாகும், மக்களுக்கென்ன, நீங்கள் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாகக் காட்டுங்கள், ‘தீபஸ்தம்பம் மஹாச்சர்யம் எனக்கும் கிட்டணம் பணம் ‘ அவ்வளவுதான். ஓட்டுகள் அடை மழையாகக் கொட்டாதோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை