2 ஆண்டுகளுக்கு பின் டெலிவரி ஆன குக்கர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆர்டர் செய்து, ரத்து செய்துவிட்ட குக்கரை, அந்நிறுவனம் தற்போது அவருக்கு டெலிவரி செய்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் ஜே என்பவர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 2022 அக்., 1ம் தேதி, அமேசான் தளத்தில் ஒரு குக்கரை வாங்குவதற்காக பணம் செலுத்தினேன். பின், அந்த குக்கர் தேவையில்லை என முடிவு செய்து, அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிட்டேன். அமேசான் நிறுவனம் நான் செலுத்திய பணத்தை திருப்பி தந்துவிட்டது. இந்நிலையில் ஆக., 28ல் என் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்து பார்த்த போது குக்கர் இருப்பதை பார்த்து குழப்பமடைந்தேன். அதன் பின் தான் புரிந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேன்சல் செய்த ஆர்டரை தற்போது அமேசான் டெலிவரி செய்திருக்கிறது. அதனால் இந்த குக்கர் சிறப்பை பெற்றுள்ளது. இதில் சமைப்பவர் உற்சாகமடைவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.