வாசகர்கள் கருத்துகள் ( 2 )
hmm most of the mothers doing house work and then going to job as well.
வாகன ஓட்டிகளுக்கு ஹார்ன் அடிப்பது ரத்தத்தில் ஊறியது.
மேலும் செய்திகள்
காதை பதம் பார்க்கும் பேருந்து 'ஏர் ஹாரன்'
27-Aug-2024
பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, அப்பிகெரேயை சேர்ந்த தம்பதி ஜுகல் லோஹியா - சாக் ஷி. இவர்களுக்கு குஞ்ஜித், 10, என்ற மகன், கிரிஷா, 3, என்ற மகள் உள்ளனர். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குன்ஜித் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.தினமும் பள்ளி முடித்து மாலை வீட்டுக்கு வரும் குஞ்ஜித், கழுத்தில் ஒரு விழிப்புணர்வு பதாகையை மாட்டியபடி, தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாசல் முன் நிற்கிறார். அந்த பதாகையில், 'தயவுசெய்து ஹார்ன் அடிக்காதீர்கள். உங்களின் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன் சத்தம், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கானது' என, குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து குஞ்ஜித் கூறியதாவது:என் தாயார் தினமும் காலையில் என்னை பள்ளிக்கு அனுப்ப, சேவல் கூவும் முன்னரே எழுந்து விடுகிறார். காலை, மதியத்துக்கான உணவு தயாரிக்கிறார். இரவு உணவு தயாரிக்கும் வரை தொடர்ந்து வீட்டில் வேலை செய்கிறார்.அவருக்கு ஓய்வு தருவது, இரவில் அவர் துாங்கும் நேரம் தான். ஆனால், அப்போதும் கூட, இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அதிக ஹார்ன் ஒலி எழுப்பி, துாக்கத்தை கெடுக்கின்றனர்.எனவே, என் தாயார் நிம்மதியாக துாங்குவதற்காக இரவில் சில மணி நேரங்கள் மட்டும், ஒன்றரை ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் அடிக்கடி இவ்வழியாக செல்பவர்கள், ஹார்ன் அடிக்காமல் செல்கின்றனர். இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இவரது முயற்சிக்கு, தற்போது தங்கை கிரிஷாவும் ஆதரவாக செயல்படுகிறார். 10_DMR_0007பெற்றோர், தங்கையுடன் குன்ஜித்.----------------------------
hmm most of the mothers doing house work and then going to job as well.
வாகன ஓட்டிகளுக்கு ஹார்ன் அடிப்பது ரத்தத்தில் ஊறியது.
27-Aug-2024