வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிரேம்ஜி
ஜன 02, 2026 07:52
குருவாயூர் அப்பா! பத்திரமாக வைத்துக் கொள்! அப்புறம் அய்யப்பன் கோயில் கவசம் போல் காணாமல் போய் விடக்கூடாது!
பாலக்காடு: கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 27 சவரன் தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு, வெளிநாட்டில் பணியாற்றும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷோமகிருஷ்ணன் என்பவர், 27 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்றுக் கொண்டார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குருவாயூர் அப்பா! பத்திரமாக வைத்துக் கொள்! அப்புறம் அய்யப்பன் கோயில் கவசம் போல் காணாமல் போய் விடக்கூடாது!