உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 44 கிலோ எடையில் மரவள்ளி கிழங்கு

44 கிலோ எடையில் மரவள்ளி கிழங்கு

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே விவசாயி கனகராஜ் பயிரிட்ட ஒரு செடியில் 44 கிலோ எடை கொண்ட மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டது. அருமனை அருகே கடையாலுமூட்டையைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் 55. இவர் தன் நிலத்தில் ஒரு ஆண்டுக்கு முன் மர வள்ளி கிழங்கு சாகுபடி செய்து பராமரித்து வந்தார். நேற்று மரவள்ளிக் கிழங்கை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செடியில் கிழங்கை வெளியே பிடுங்கி எடுக்க முடியவில்லை. பின் மண்ணை அப்புறப்படுத்தி மூன்று பேர் சேர்ந்து வெளியே எடுத்தபோது மிகப்பெரிய கிழங்கு வந்தது. அதன் எடை 44 கிலோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை