வாசகர்கள் கருத்துகள் ( 1 )
DONT PUNISH ANIMALS FOR HUMANS ENJOYMENT. THEY ARE ALSO SOULS LIKE YOU. THINK SERIOUSLY.
மேலும் செய்திகள்
திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு பிரசாரம்
11-Oct-2024
மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் கூட, விளையாட்டில் ஜமாய்க்கின்றன. ஜல்லிக்கட்டு, கம்பாலா விளையாட்டுகளே இதற்கு உதாரணம். அதே போன்று கிடாக்களின் சண்டையும் கிராமங்களில் நடப்பதை காணலாம்.பாகல்கோட் தெக்லி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர், ஆடு வளர்க்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன், இவர் ஆட்டுக்கிடாவை 90,000 ரூபாய் கொடுத்து வாங்கினார். இதற்கு 'ஜெயசிம்மா' என்ற பெயரிட்டு வளர்த்தார். ஆட்டுக்கிடா சண்டைகளில் பங்கேற்க வைத்தார். பாகல்கோட் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் ஜெயசிம்மா பங்கேற்றுள்ளது. இதுவரை எந்த சண்டையிலும் தோற்றதே இல்லை.இது போட்டியில் பங்கேற்கிறது என்றாலே, வெற்றி உறுதி. 50க்கும் மேற்பட்ட சண்டைகளில் பங்கேற்று, வெற்றி வாகை சூடியது.ஜெயசிம்மாவை விலைக்கு வாங்க, நான், நீ என பலர் போட்டி போட்டனர். சமீபத்தில் தார்வாடை சேர்ந்த ஆர்.எக்ஸ்.ஒய்., என்ற நிறுவனத்தினர், 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சண்டைக்கு பயன்படுத்தப்படும் ஆடுகள், லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாவது, மிகவும் அபூர்வம். - நமது நிருபர் -
DONT PUNISH ANIMALS FOR HUMANS ENJOYMENT. THEY ARE ALSO SOULS LIKE YOU. THINK SERIOUSLY.
11-Oct-2024