உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பரிதவித்த வடமாநில குடும்பம்; வழிகாட்டிய சிங்கப்பெண் படை

பரிதவித்த வடமாநில குடும்பம்; வழிகாட்டிய சிங்கப்பெண் படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: நாகையில், வேலைக்காக அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீஹார் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரை, 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போலீசார் மீட்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்தனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணிக்காக, பீஹார் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட எட்டு பேரை, சிலர் அழைத்து வந்துள்ளனர். வேலை முடிந்ததும், அவர்களை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சொந்த ஊருக்கு செல்வதற்கு கையில் பணமில்லாமல், கால்நடையாக பொரவச்சேரிக்கு வந்தவர்கள், அங்கு சுற்றி திரிந்தனர். இத்தகவல், நாகை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெண் போலீசார், வட மாநிலத்தவர்களை மீட்டு, எஸ்.பி., அலுவலகம் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின், அவர்களை பீஹார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JeevaKiran
ஜூலை 02, 2026 13:36

நடிகன் ஆட்சியில் நடிப்பைத்தான் காண முடியும். வேறென்ன?


xyzabc
ஜூன் 19, 2026 07:07

Much appreciation to singa penn team. Needed badly


Solomon Timothy
ஜூன் 17, 2026 13:28

ஊர்ல கொண்டு பத்திரமாக விட்டுட்டு வந்த மாதிரி பேசுறாங்க


Ramar P P
ஜூன் 14, 2026 22:45

நல்லது தொடரட்டும்


morlot
ஜூன் 14, 2026 15:34

If a tamil family is abadonned at bihar or uttarpradesh,do you think their police will help the tamil family to return their home?


Sankar Vedhachalam
ஜூன் 14, 2026 14:05

வாழ்த்துக்கள்


Indian
ஜூன் 14, 2026 11:51

யார் மூலம் தகவல் கிடைத்தது?


Ram pollachi
ஜூன் 14, 2026 06:41

ஏதாவது வேலை செய்வது போல் காண்பிக்க வேண்டும்..... தொழில் கடன் வேண்டுமா இல்ல வேண்டாம் சார் அப்படியே இருங்க ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்..... ரோட்டில் செல்பவரை நிறுத்தி ஒரு போட்டோ அதற்கு பெயர் வழிகாட்டுதலா? ஐந்து மாநிலத்தை தாண்டி வந்தவனுக்கு திரும்பி போக தெரியாதா?


Solomon Timothy
ஜூன் 17, 2026 13:26

எல்லாமே இப்பொழுது நடிப்பாக மாறிவிட்டது என்ன செய்வது அதனால் தான் பைபிள் கூட இப்படி சொல்லுகிறது துன்மார்க்கர் போடும் வெளிச்சமும் பாவமே என்று


Rathinasamy Rathinasamy
ஜூன் 13, 2026 20:00

தொடரட்டும் சிங்கப்பெண்ணின் சேவைகள். தன்னார்வத்துடன் வழிகாட்டிய மைக்கு மிக்க நன்றிகள்.. அன்புடனும், கண்ணியத்துடனும் செயல்பட்டமைக்கு எனது மனமார்ந்த நனறி... நன்றி. .


நந்தகோபால், நெல்லை , in பெங்களூரு
ஜூன் 13, 2026 16:57

இது உங்க வேலை இல்லையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை